“நலமாக இருக்கிறேன்; எனக்கு எந்த காயமும் இல்லை; காருக்குதான்...” - ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!
விபத்து நடந்த சில நிமிடங்களில் ஏபிபி நிறுவனத்தில் இருந்து கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு போன் செய்து நலம் விசாரித்தோம்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இருப்பினும், காரின் முன்பகுதி பெரியளவில் பாதிப்பு இல்லை என்றும், ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவும் இன்றி தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துநடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசார் வரவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ததுடன் ராதாகிருஷ்ணன் சுனாமிதினத்தியொட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்தினார்.
View this post on Instagram
தொடர்ந்து, விபத்து நடந்த சில நிமிடங்களில் ஏபிபி நிறுவனத்தில் இருந்து கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு போன் செய்து நலம் விசாரித்தோம். அப்போது பதிலளித்த அவர், “நான் நலமாக இருக்கிறேன், எனக்கு எந்த காயமும் இல்லை. விபத்தில் காரின் முன்பகுதியில் மட்டுமே அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது” என்று தகவல் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

