Mettur Dam flood alerts: மேட்டூர் அணை திறப்பு: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று உபரி நீர் திறந்துவிடப்படுவதால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை அபாயம்: 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விவரமும் இங்கே!
இதுகுறித்து அறிவிக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (08.11.2021) இரவு 8.00 மணியளவில் 118.3200 அடியை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 5.00 மணியளவில் 119.00 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் முதற்கட்டமாக 5000கனஅடி திறந்துவிடப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
வானிலை முன்னெச்சரிக்கை: உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - மிகக் கனமழைக்கு வாய்ப்பு!
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது".
காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவான 65 அடியையும், அதே போன்ற மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவான 124.8 அடியாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வாசிக்க:44வது முறையாக முழு கொள்ளவை எட்டும் மேட்டூர் அணை!
பருவமழை முன்னேற்பாடு - 12 மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்:யார் யார் எங்கு?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்