கனமழை அபாயம்: 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விவரமும் இங்கே!
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நாகப்பட்டினம், விருதுநகர், கடலூர் மாவட்டங்களில் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், மயிலாடுதுறை, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கனமழை அபாயம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வானிலை முன்னெச்சரிக்கை: உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - மிகக் கனமழைக்கு வாய்ப்பு!
முன்னதாக, வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது. வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் நோக்கி முன்னேறி கரையை கடக்கக்கூடும் என்று ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,, டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை முதல் மிககனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை பகுதிகள், இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால், 11-ந் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை போதியளவு கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Orange Alert : இந்த 14 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை! சென்னையில் மீண்டும் மழை.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்