Cyclone: ”புஸ்ஸான புயல்... வாய்ப்பில்லை ராஜா” வானிலை ஆய்வு மைய தகவலால் ஆறுதல்..
புயலாக உருமாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது. மியான்மர் கடல் பகுதிகளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும், மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
Deep Depression over north Andaman Sea and adjoining areas of eastcentral Bay of Bengal lay centered at 0530 hours IST of today, the 22nd March about 250 km north-northeast of Mayabundar (Andaman Islands), 300 km southwest of Yangon (Myanmar) and 400 km south of Thandwe (Myanmar) pic.twitter.com/j5uRLK8v7V
— India Meteorological Department (@Indiametdept) March 22, 2022
இந்நிலையில், புயலாக உருமாறுவதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது. மியான்மர் கடல் பகுதிகளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் புயல் ஏற்படவில்லை என தெரிவித்திருக்கிறது.
எனினும், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மேலும் இன்று நாள் முழுவதும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மிதமான மலை பெய்யக்கூடும் என தெரிவித்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்