மேலும் அறிய

Kodanadu Heist Case | கோடநாடு வழக்கு கூடுதல் விசாரணை ; மேலும் இரண்டு பேரிடம் விசாரணை..!

விபத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளியான கனகாரஜின் நண்பர்களான குழந்தை வேலு, சிவன் ஆகிய இருவரும் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், சம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். பின்னர் ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் அவரது உறவினர் தினேஷ், குற்றவாளிகளை கேரளாவிற்கு தப்பிக்க உதவியதாக கூறப்படும் கூடலூர் பகுதியை சார்ந்த அனீஸ் மற்றும் சாஜி, சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனங்களை வழங்கிய வாகன உரிமையாளர் நவ்ஷத், இடைத்தரகர் நப்பல் ஆகியோரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோடநாடு எஸ்டேட்டிலும் தனிப்படை காவல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

Kodanadu Heist Case | கோடநாடு வழக்கு கூடுதல் விசாரணை ; மேலும் இரண்டு பேரிடம் விசாரணை..!

கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சம்சீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சம்சீர் அலி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாகவும், ஜித்தன் ஜாய் உறவினர் திருமணம் காரணமாகவும் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. நீலகிரி காவல் துறையினர் குறிப்பிடும் தேதியில் இருவரும் கூடுதல் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்புள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளியான கனகாரஜின் நண்பர்களான குழந்தை வேலு, சிவன் ஆகிய இருவரும் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இருவரிடமும் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ்ராவத், டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்டோர் 5 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கனகராஜின் நண்பர்களான இருவரிடமும் கனகராஜுக்கு இருந்த நெருங்கிய தொடர்புகள், முக்கிய நபர்களுடான பழக்கம் மற்றும் நெருக்கமாக இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
Isha Ambani: டக்கு டக்குன்னு மாறும் கலர்! அசத்தும் பென்ட்லி பெண்டாய்கா SUV கார்: திரும்பி பார்க்க வைத்த முகேஷ் அம்பானி மகள்! விலை எவ்வளவு தெரியுமா?
Isha Ambani: டக்கு டக்குன்னு மாறும் கலர்! அசத்தும் பென்ட்லி பெண்டாய்கா SUV கார்: திரும்பி பார்க்க வைத்த முகேஷ் அம்பானி மகள்! விலை எவ்வளவு தெரியுமா?
Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ
Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
Isha Ambani: டக்கு டக்குன்னு மாறும் கலர்! அசத்தும் பென்ட்லி பெண்டாய்கா SUV கார்: திரும்பி பார்க்க வைத்த முகேஷ் அம்பானி மகள்! விலை எவ்வளவு தெரியுமா?
Isha Ambani: டக்கு டக்குன்னு மாறும் கலர்! அசத்தும் பென்ட்லி பெண்டாய்கா SUV கார்: திரும்பி பார்க்க வைத்த முகேஷ் அம்பானி மகள்! விலை எவ்வளவு தெரியுமா?
Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ
Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
Aamir Khan : எங்களுக்கு ஏன் குறைவான சம்பளம்..? சுற்றி வளைத்த நடிகைகள்.. ஆமீர் கான் கொடுத்த நச் பதில்
Aamir Khan : எங்களுக்கு ஏன் குறைவான சம்பளம்..? சுற்றி வளைத்த நடிகைகள்.. ஆமீர் கான் கொடுத்த நச் பதில்
திருமணமான பெண்கள்தான் குறி...  ஏமாற்றிய இளைஞரை தட்டி தூக்கிய காவல்துறை...!
திருமணமான பெண்கள்தான் குறி... ஏமாற்றிய இளைஞரை தட்டி தூக்கிய காவல்துறை...!
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Embed widget