Night curfew | வெறிச்சோடிய சாலைகள்.. ஸ்ட்ரிக்ட் காவலர்கள்.. அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு!
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
கொரோனா பரவல் சற்று ஓய்ந்ததை அடுத்து ஒமிக்ரான் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1,000க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடைசி ஒரு வாரமாக மின்னல் வேகத்தில் உயர்ந்துவருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 6,983ஆக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3,759 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
#TamilNadu | #COVID19 | 06 January 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 6, 2022
• TN - 6,983
• Total Cases - 27,67,432
• Today's Discharged - 721
• Today's Deaths - 11
• Today's Tests - 1,28,736
• Chennai - 3,759#TNCoronaUpdates #COVID19India
இதற்கிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி தினமும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பேருந்து, ரயில்களில் 50 சதவீதம் இருக்கைகளுடன் மட்டுமே பயணம் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஊரடங்கில் யாரும் வெளியே வருகிறார்களா என்பதை கண்காணிக்க காவல் துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 10,000 காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கின்போது பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் சாலையோர கடைகள், இரவு நேர் உணவகங்கள் உள்ளிட்டவைகளும் மூடப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றியவர்களுக்கு காவல் துறையினர் அபராதமும் விதித்தனர்.
அதேசமயம் இரவு பணிக்கு செல்பவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 5 மணிக்கு ஊரடங்கு நிறைவடைந்தவுடன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, வெளியூர் செல்லக்கூடிய போக்குவரத்தும் தொடங்கியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்