புதுசா கல்யாணம் ஆன ஜோடியா நீங்க; ரேஷன் கார்டு வாங்கணுமா.. இதை செய்யுங்க!
ரேஷன் அட்டை ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணம். பல கோடி மக்களுக்கான வாழ்வாதாரமும் கூட. அப்படியிருக்க ரேஷன் அட்டையை எப்படிப் பெறுவது?
ரேஷன் அட்டை ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணம். பல கோடி மக்களுக்கான வாழ்வாதாரமும் கூட. அப்படியிருக்க ரேஷன் அட்டையை எப்படிப் பெறுவது? புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படிப் பெறுவது என்றெல்லாம் பற்பல நடைமுறைகள் உள்ளன.
புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் குடும்ப அட்டை பெறுவது எப்படி?
திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். அல்லது தனி கார்டாக கணவன், மனைவி இருவரும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தனி கார்டு வேண்டும் என நினைத்தால் முதலில் ஏற்கெனவே உள்ள வீட்டு ரேஷன் கார்ட்டில் இருந்து உங்களின் பெயரை நீக்க வேண்டும். அவ்வாறு உங்கள் பெயரை நீக்கிய பிறகே, புதிய கார்டில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். இந்த பெயர் நீக்கத்தை ஆன்லைனிலேயே செய்து முடிக்கலாம்.
அடுத்தக்கட்டமாக ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். முகவரியையும் மாற்ற வேண்டியிருக்கும். ஆதார் அட்டையில் முகவரியை சரியாக அப்டேட் செய்த பிறகு, திருத்தப்பட்ட ஆதார் அட்டையை ஆவணமாக சமர்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம்.
அரசு இணையதள முகவரியான https://tnpds.gov.in/ என்ற லிங்கில் சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளும் இடம் இருக்கும். இது தமிழகஉணவு வழங்கல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் (1967 அல்லது 1800-425-5901) என்ற எண்ணைத் தொடர்புகொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறாக புதிய கார்டைப் புதுமணம் செய்தோர் பெறலாம்.
குழந்தைகளின் பெயர் சேர்த்தல்:
முன்பெல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமெனில், குழந்தைகளின் பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டும் தேவை. குழந்தைகளுக்கும் ஆதார் கார்டினை பெற்றுக் கொண்டு ரேஷன் கார்டில் அவர்கள் பெயரை சேர்க்கலாம்.
இப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம், வீடு மாறி சென்றாலும் ,ஊர் மாறி சென்றாலும் அல்லது மாநிலம் மாறி சென்றாலும் இனிமேல் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொதுமக்கள் தாங்கள் இடம் மாறி செல்லும் இடத்தில் தங்களது ஆதார் எண்ணை அல்லது ரேஷன் அட்டை எண்ணை மட்டும் கொடுத்து ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.