Weather Update: வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. சட்டென மாறும் வானிலை!!
வங்கக்கடலில் வரும் 28-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு அந்தமான் பகுதியில் வரும் 28-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு தொடங்கியது முதலே வெயில் தமிழ்நாடு முழுவதும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கு எந்த வாய்ப்புமில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்