சென்னை, ஓசூரில் புதிய விமான நிலையம் - கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
ஓசூர் அருகே அதிகளவில் தொழிற்சாலைகள் இருப்பதால் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முற்சிப்பதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அதிகளவில் தொழிற்சாலைகள் இருப்பதால் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் நேற்று வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்றும் சட்டபேரவை விவாதம் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு சமர்பித்துள்ளதாகவும், நான்கு இடங்களில் விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் குழு பார்வையிட்டு சாத்தியக்கூறு அறிக்கையை கொடுத்துள்ளதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முயன்று வருவதாகவும், ஓசூர் அருகே அதிகளவில் தொழிற்சாலைகள் இருப்பதால் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முற்சிப்பதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
#JUSTIN | சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்!https://t.co/wupaoCQKa2 | #Chennai #TNGovt #Airport pic.twitter.com/65bQKk2dp3
— ABP Nadu (@abpnadu) April 19, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்