Nam Tamilar Seeman father death : சீமான் தந்தை செந்தமிழன் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தந்தை செந்தமிழன் மறைவிற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளில் மிகவும் முக்கியமான கட்சியாக திகழ்வது நாம் தமிழர். அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். சென்னையில் தனது குடும்பத்தினருடன் சீமான் வசித்து வருகிறார். அவரது தந்தையான செந்தமிழன், சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் வசித்து வந்தார். இந்த நிலையில், 80 வயதான சீமானின் தந்தை செந்தமிழன் கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “முக்கிய அறிவிப்பு. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை அப்பா செந்தமிழன் மறைவுற்றார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். இடம் : அரணையூர். “ என்று பதிவிட்டுள்ளனர். சீமானின் தந்தை மறைவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவெய்திய செய்தி வேதனை அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலை தெரிவிக்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். செந்தமிழனை இழந்துவாடும் சீமானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் தந்தை திரு. செந்தமிழன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.(1/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 13, 2021

திரு.செந்தமிழன் அவர்களை இழந்துவாடும் திரு.சீமான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.(2/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 13, 2021

மேலும், முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீ்ரசெல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அன்புத் தந்தை செந்தமிழன் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையுற்றேன். தனது தந்தையை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் அன்புத் தந்தை திரு.செந்தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையுற்றேன்.

தனது தந்தையை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 13, 2021

மேலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் சீமானின் தந்தையார் செந்தமிழன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். சீமானின் திரையுலகப் பயணத்திற்கும், பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் செந்தமிழன் மறைவால் வாடும் சீமானுக்கும், குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். “ என்று பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021

திரு.சீமான் அவர்களின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் திரு.செந்தமிழன் அவர்களின் மறைவால் வாடும் திரு.சீமான் அவர்களுக்கும்,....
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021

குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். @NaamTamilarOrg
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021

மேலும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “நண்பர் சீமானின் இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களது தந்தையின் மறைவுக்கு என்து ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நண்பர் @SeemanOfficial இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 13, 2021

My deepest condolences for the loss of your father, dear @Seemanofficial.
— Kamal Haasan (@ikamalhaasan) May 13, 2021

இவர்கள் தவிர இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் சீமான் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.