ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை விசாரித்த நல்லம நாயுடு வீட்டில் நகை, பணம் கொள்ளை
’’நல்லம நாயுடு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி உயிரிழந்தார்’’
பிரபல ரவுடி வெள்ளபள்ளம் வினோத் மற்றும் அவனது கூட்டாளிக்கு 7ஆண்டுகள் சிறை
சரவணன் தனது உறவினரான ஆசைத்தம்பி என்பவரிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தன. உடனடியாக இது குறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தேனி மாவட்டத்தில் உள்ள சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் தான் திருடு போன நகைகளின் மொத்த மதிப்பு தெரியவரும் எனவும் கூறப்படுகிறது. பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து திருடர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்து பழைய திருடர்களின் கைரேகை ஒத்துப் போகிறதா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். வீட்டிலிருந்து வளையல் நெக்லஸ் கம்மல் செயின் மோதிரம் என 11 சவரன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் வெள்ளி பொருட்கள் திருடு போய் உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வியாசர்பாடி போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.