Nakkeeran Reporter Attack: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர், புகைப்படக் கலைஞர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
![Nakkeeran Reporter Attack: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் Nakkeeran magazine's chief special correspondent, the attack on the photographer Press Club strongly condemns Nakkeeran Reporter Attack: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/19/6041215c2ca2ff30568149c1e49592641663603651302175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:
நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் இன்று (19-09-2022) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் pic.twitter.com/GoOq3V2lX0
— News.Source (@NewsSource11) September 19, 2022
பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்:
இத்தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் ,புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் பழிவாங்கும் போக்கு அதிகரித்து வருவதை காண முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்காக இருக்காது என்பதை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் உணர வேண்டும் .பத்திரிகையாளர்களை தாக்குகின்ற சமூக விரோத கும்பலாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்டபூர்வ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முதலமைச்சரிடம் கோரிக்கை:
பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்குரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்பதுதான் அனைத்து பத்திரிகையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பலை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு தரப்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)