மேலும் அறிய

முத்துப்பேட்டை அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல தடை; வனத்துறை உத்தரவு!

முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா செல்ல வனத்துறை தடை செய்துள்ளது என மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறியுள்ளார். 

முத்துப்பேட்டை அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல தடை. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை எதிரொலியாக  வனத்துறை உத்தரவு.   
 
தமிழ்நாட்டில் சிதம்பரம் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் சதுப்புநில காடுகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதிகளை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்து நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் தொடர்ந்து சுற்றுலா வந்து செல்கின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது திருவாரூர் மாவட்டத்தை கடல் அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாத்த பெருமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதனை அடுத்து முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளை பாதுகாக்கும் வகையில் தமிழக வனத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஏராளமான மக்கள் நாள்தோறும் இந்த இடத்திற்கு வருகை தந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில்  பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். 

முத்துப்பேட்டை அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல தடை; வனத்துறை உத்தரவு!
இந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை எதிரொலியாக தமிழக அரசு மீண்டும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவின் அறிய பகுதியாகவும், தமிழ்நாட்டின் மிகப் பெரிய சுற்றுலா தளமாக கருதப்படும் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா செல்ல வனத்துறை தடை செய்துள்ளது என மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில்... நமது நாட்டின் மிகப்பெரிய காடான இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு இப்பகுதி கிடைத்த ஒரு பொக்கிஷம், இதனை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்தநிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் இந்த நோயிலிருந்து பாதுக்காக்கும் வகையில் இன்று முதல் அலையாத்திக் காட்டுக்கு சுற்றுலா செல்லவும், சுற்றுலா பயணிகள் படகுகள் செல்லவும் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றார். 

முத்துப்பேட்டை அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல தடை; வனத்துறை உத்தரவு!
குறிப்பாக முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் கடந்த கஜா புயல் தாக்கத்தின் போது கடுமையான பாதிப்பை சந்தித்தது. சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு அங்கு இருந்த பலகைகள் மற்றும் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட வழித்தடங்கள் அனைத்தும் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டன. அதன் பின்னர் அதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதற்கான பணிகளை வனத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வந்தது பின்னர் வழக்கம்போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் அலையாத்தி காடுகளுக்கு வருகைதந்து வந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் மக்களின் நலனுக்காக இந்த அறிவிப்பு விடப்பட்டு இருப்பதால் இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை ( 19-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை ( 19-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget