மேலும் அறிய

முல்லைப்பெரியாறு அணை: கேரளாவின் சூழ்ச்சி! டிடிவி தினகரன் கடும் கண்டனம்! தமிழகத்தின் உரிமை காக்கப்படுமா?

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசு மற்றும் அதன் ஆதரவுடன் செயல்படும் சில அமைப்புகள் தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்து வருகின்றன.

முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசு மற்றும் அதன் ஆதரவுடன் செயல்படும் சில அமைப்புகள் தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்து வருகின்றன.

முல்லைப்பெரியாறு அணை: கேரளாவின் சூழ்ச்சி! டிடிவி தினகரன் கடும் கண்டனம்! தமிழகத்தின் உரிமை காக்கப்படுமா?

இதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் விசாரித்த வழக்கில், அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கலாம் என்றும், புதிய அணை கட்டும் சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசின் உதவியுடன் கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற பொதுநல அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கலாம் என்பதோடு புதிய அணைகட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என கருத்து தெரிவித்துள்ளது. 

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வரும் கேரள அரசும், அம்மாநிலத்தின் சில அமைப்புகளும் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. முல்லைப்பெரியாறு அணை வலுவோடும், உறுதித் தன்மையோடும் இருப்பதாக ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்குழு தெரிவித்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வழக்குகளை தொடர்வதோடு, பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் வதந்திகளையும் பரப்பி வரும் கேரளத்தின் சில அமைப்புகளின் செயல்பாடு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை: கேரளாவின் சூழ்ச்சி! டிடிவி தினகரன் கடும் கண்டனம்! தமிழகத்தின் உரிமை காக்கப்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதோடு, பேபி அணை மற்றும் சுற்றிய பகுதிகளை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்  என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்ற பின்பும், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் கேரள அரசின் செயல்பாடு விஷமத்தனமானது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதோடு, தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியாக முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் டிடிவி தினகரன்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RMC on Cyclone: வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Gold Rate 21st Oct.: என்னய்யா இது.?! காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் - தற்போதைய விலை என்ன.?
என்னய்யா இது.?! காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் - தற்போதைய விலை என்ன.?
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்களே உஷார்! முக்கிய அறிவிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்களே உஷார்! முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேஜஸ்வி நேருக்கு நேர்! அடித்துக்கொள்ளும் RJD-காங்கிரஸ்!
ஆரம்பிக்கலாங்களா... 6 நாட்களுக்கு கனமழை! எந்தெந்த இடங்களுக்கு வார்னிங்
Trump warns Modi | பதிலடி கொடுத்த இந்தியா!
Children gift to Sanitation workers |தூய்மை பணியாளர்களுக்கு giftசிறுவர்கள் நெகிழ்ச்சி செயல்
Baijayant Panda Anbumani | கண்டிசன் போட்ட பாண்டாகறார் காட்டும் அன்புமணிபாமக Game Starts!25+1

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RMC on Cyclone: வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Gold Rate 21st Oct.: என்னய்யா இது.?! காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் - தற்போதைய விலை என்ன.?
என்னய்யா இது.?! காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் - தற்போதைய விலை என்ன.?
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்களே உஷார்! முக்கிய அறிவிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்களே உஷார்! முக்கிய அறிவிப்பு
Trump Vs China Tariff: நவம்பர் 1-ல் இருந்து வரி 155% ஆகிடும் ஜாக்கிரதை; சீனாவை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்
நவம்பர் 1-ல் இருந்து வரி 155% ஆகிடும் ஜாக்கிரதை; சீனாவை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்
Red Alert: அதிகனமழை அபாயம்.. 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - உங்க ஊருக்கும் இருக்கா?
Red Alert: அதிகனமழை அபாயம்.. 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - உங்க ஊருக்கும் இருக்கா?
இது கூட்டணியா? குழப்ப அணியா? தேஜஸ்வி யாதவிற்கு வில்லனாக மாறும் கூட்டணி கட்சிகள்!
இது கூட்டணியா? குழப்ப அணியா? தேஜஸ்வி யாதவிற்கு வில்லனாக மாறும் கூட்டணி கட்சிகள்!
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... த.வெ.க.,வை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் !
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... த.வெ.க.,வை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் !
Embed widget