மேலும் அறிய

பனைத்தொழிலுக்குப் பேராபத்து! 18% ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக அன்புமணி இராமதாஸ் காட்டம்

பனங்கற்கண்டுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை ஜி.எஸ்.டி ஆணையரகம் கைவிட வேண்டும்!

சென்னை: பனங்கற்கண்டுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை ஜி.எஸ்.டி ஆணையரகம் கைவிட வேண்டும் என்றும், பழையபடி 5% வரியையே தொடர வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பனங்கற்கண்டுகளில் தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை செயற்கையாக தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரைக் கட்டிக்கு இணையான பொருளாகக் கருதி 18% விதிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி ஆணையரகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மத்திய அரசு வகுத்திருக்கும் ஜி.எஸ்.டி வரிக்கொள்கைக்கு எதிரானது ஆகும்.

 

தமிழ்நாட்டில் பனைமரத்தில் இருந்து உருவாகும் பதநீரைக் கொண்டு தான் பனங்கற்கண்டு தயாரிக்கப் படுகிறது. ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் பனங்கற்கண்டு எச்.எஸ்.என் குறியீடு17029010 ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இப்பிரிவில் உள்ள சில பொருள்களுக்கு 18% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாலும், பனங்கற்கண்டுக்கு 5% மட்டுமே வரி வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் பனங்கற்கண்டை எச்.எஸ்.என் குறியீடு17029090 ஆக வகைப்படுத்தியுள்ள சென்னை ஜி.எஸ்.டி ஆணையரகம், இனிமேல் பனங்கற்கண்டுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது. இது அநீதியானதாகும்.

 

பனங்கற்கண்டை எச்.எஸ்.என் குறியீடு 17029090&இல் வகைப்படுத்துவதற்காக ஜி.எஸ்.டி ஆணையரகம் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பனங்கற்கண்டில் 99% சர்க்கரை இருப்பதாகவும், அது செயற்கையாக சேர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்றும், அதனால் அவற்றுக்கு 18% வரி தான் விதிக்க முடியும் என்று ஜி.எஸ்.டி ஆணையரகம் தெரிவித்திருக்கிறது. உண்மையில் பனங்கற்கண்டில் சர்க்கரை வெளியில் இருந்து சேர்க்கப் படுவதில்லை; மாறாக பதநீரில் உள்ள சர்க்கரை தான் பனங்கற்கண்டிலும் உள்ளது. ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுக்கும் ஜி.எஸ்.டி ஆணையரகம், ‘‘பதநீரில் இருக்கும் சர்க்கரை தான் பனங்கற்கண்டிலும் உள்ளது என்றால், பதநீர் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று ஆணையிடுகிறது. இது பனங்கற்கண்டு உற்பத்தி குறித்த புரிதல் இல்லாததால் செய்யப்படும் வாதமாகும்.

 

தமிழ்நாட்டில் எவரும் பதநீரை வெளியிலிருந்து வாங்கி, அதைக் கொண்டு பனங்கற்கண்டை உற்பத்தி செய்வதில்லை. மாறாக, அனைவருமே அவர்களுக்கு சொந்தமான பனைத் தோப்பிலிருந்து தான் பதநீர் இறக்கி பனங்கற்கண்டு தயாரிக்கிறார்கள். அப்படி இறக்கப்படும் பதநீருக்கு கொள்முதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடியாது; மாறாக, பனந்தோப்புக்கான நில ஆவணங்களை தாக்கல் செய்தாலே போதுமானது. இதை சென்னை உயர்நீதிமன்றமே உறுதி செய்திருக்கும் போதிலும், அதை ஏற்க மறுத்து பனங்கற்கண்டுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையரகம் கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

 

பனங்கற்கண்டில் எத்தனை விழுக்காடு சக்கரை இருந்தாலும் அது பனங்கற்கண்டின் தன்மையை மாற்றாது; ஒரு பொருள் என்ன பெயரில் அழைக்கப்படுகிறதோ, அந்த பொருளுக்கு உரிய வரி தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று பல உயர்நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் கூறியுள்ளன. மேலும் எச்.எஸ்.என் குறியீடு 17029010&இல் வகைப்படுத்தப்பட்டுள்ள பொருளுக்கு இன்னொரு வகைப்பாட்டில் உள்ள வரியை வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசும், நீதிமன்றங்களும் கூறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பனங்கற்கண்டை செயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக் கொண்ட பொருள் என வகைப்படுத்தி அதற்கு 18% வரி செலுத்தக் கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

 

பனங்கற்கண்டு உற்பத்தி பெரிய அளவில் முதலீடு கொண்ட தொழில் அல்ல. மிகக்குறைந்த முதலீட்டில் செய்யப்படும் குடிசைத் தொழில் தான் அதுவாகும். பிற சர்க்கரைப் பொருள்களுக்கு இருப்பதைப் போன்ற பெரிய சந்தையும் பனங்கற்கண்டுக்கு இல்லை. கிட்டத்தட்ட மருத்துவ குணம் கொண்ட பொருளாகவே பனங்கற்கண்டு கருதப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது பனங்கற்கண்டுக்கு 18% வரி விதிக்கப்பட்டால் அதன் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். அத்தகைய சூழலில் பனங்கற்கண்டு உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபடும் உழவர்களும், வணிகர்களும் பனைத் தொழில் இருந்து விலகும் நிலை உருவாகும். அது பனைத்தொழிலுக்கும், அதை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்போருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

பனைத்தொழில் மற்றும் அதில் ஈடுபட்டிருப்போரின் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் பனங்கற்கண்டுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்து மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. அதை மாற்றும் செயலில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. எனவே, பனங்கற்கண்டை எச்.எஸ்.என் குறியீடு 17029090&இல் வகைப்படுத்தும் ஆணையை திரும்பப் பெற்று, அதை எச்.எஸ்.என் குறியீடு 17029010&இல் தொடர்ந்து நீடிக்கச் செய்யும் வகையில் ஜி.எஸ்.டி ஆணையரகம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!
திடீர் வருகை... திகைப்பில் அரசியல் களம்! – ஆகஸ்ட் 8-ல் தமிழகம், புதுச்சேரிக்கு வருகிறார் அமித் ஷா!
திடீர் வருகை... திகைப்பில் அரசியல் களம்! – ஆகஸ்ட் 8-ல் தமிழகம், புதுச்சேரிக்கு வருகிறார் அமித் ஷா!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
லட்சங்களில் பரிசுகள்: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
லட்சங்களில் பரிசுகள்: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget