TN Special Bus: வார விடுமுறை, முகூர்த்த நாள்! 3 நாட்களுக்கு 1,460 சிறப்பு பேருந்து - முன்பதிவு செய்வது எப்படி?
TN Special Bus: முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாளையொட்டி மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 24, மே 25, 26 ஆகிய 3 நாட்களில், பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு எளிதாக செல்லும் வகையில் கூடுதலாக 1460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்து:
சிறப்பு தினம் என்றாலே வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். அதன் காரணமாக, சிறப்பு தினங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதன் காரணமாக பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். இதன் காரணமாக, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் பேருந்துகளை இயக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்யும்.
இந்த தருணத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் வருகிறது. மேலும், வார விடுமுறை என்பதாலும், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மே 24, மே 25, 26 ஆகிய 3 நாட்களில், பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு எளிதாக செல்லும் வகையில் கூடுதலாக 1460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 24, 25 & 26/05/2024 அன்று 1460 சிறப்பு பேருந்துகள் இயக்கம்@cmotamilnadu @mkstalin @mp_saminathan @sivasankar1ss#TNDIPR #TNMediaHub #CMMKSTALIN #tngovt #tnsct #tnstcbus #setc #tnbus pic.twitter.com/NRx8pRpchG
— TN DIPR (@TNDIPRNEWS) May 24, 2024
எப்படி முன்பதிவு செய்வது?
- www.tnstc.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது tnstc என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- பின்னர் தமிழ்நாடு போக்குவரத்து துறையின், பேருந்து டிக்கெட்டுகளை புக் செய்வதற்கான பக்கம் தோன்றும்
- அதில் எங்கிருந்து, எங்கு செல்ல போகிறோம் என்ற இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
- செல்லும் நாட்களின் தேதியை தேர்வு செய்து search என்பதை கிளிக் செய்ய வேண்டும்
- பின்னர் பேருந்துகளின் இருக்கை விவரம் குறித்தான பக்கம் தோன்றும்
- அதில் விருப்பத்துக்கு ஏற்ப பேருந்து மற்றும் இருக்கையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- பின்னர் கட்டணத்தை செலுத்திய பின்பு, உங்களுக்கான டிக்கெட் புக் செய்யப்பட்டு விடும்.
டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், காலம் தாழ்த்தாது புக் செய்து விடுங்கள், ஒருவேளை அதிக பயணிகள் சொந்த ஊருக்குச் செல்வது நேர்ந்தால், டிக்கெட் வேகமாக புக் செய்யப்பட்டு விடும். எனவே தாமதமானால், டிக்கெட் உங்களுக்கு கிடைக்காமலும் கூட போகலாம். எனவே, வேகமாக புக் செய்து, பாதுகாப்பான மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
Also Read: TN Weather Update: நாளை முதல் மழை இல்லை! 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் - வானிலை சொல்வது என்ன?