Isha Yoga As Identity | "தமிழ்நாட்டின் அடையாளமாக ஈஷா படம் பயன்படுத்தப்பட்டுள்ளது” - எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்..
கொரோனா வழிகாட்டுதலில் தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு வரும் பகுதியில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஈஷா யோக படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையத்தின் ஆணையம், சமீபத்தில் மாநிலங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய ஆவணத்தை வெளியிட்டது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்ற வேண்டிய கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்துதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை வெளியிட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு வரும் பகுதியில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஈஷா யோகா படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். @AAI_Official
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 13, 2021
வன்மையான கண்டனம்.
உடனே மாற்று. https://t.co/jgca0XRhD2 pic.twitter.com/R2C5CElfrb
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். வன்மையான கண்டனம். உடனே மாற்று” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.