மேலும் அறிய

Mocha Cyclone: நாளை கரையை கடக்கும் 'மோக்கா' புயல்; தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை - முழு விவரம் உள்ளே..!

மோக்கா புயல் வடக்கு -வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மிகத்தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (12.05.2023), தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர “மோக்கா” புயலானது நேற்று (12.05.2023) இரவு 2330  மணி அளவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0830 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல்  பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் வடக்கு - வடமேற்கே நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து  நாளை (14-ந் தேதி) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மிகத்தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

இன்று முதல் 15.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  16.05.2023 மற்றும் 17.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை : 

13.05.2023 முதல் 17.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4  டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 

14.05.2023, 15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) 6, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 5, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) 4, அணைக்கிடங்கு (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 3, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மயிலாடி (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகள்:

14.05.2023: இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும்   வீசக்கூடும்.


15.05.2023: தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள்,  குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

வடக்கு அந்தமான் கடல் பகுதிகள்: 14.05.2023:  சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும்   வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:  13.05.2023 மாலை வரை: சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 145  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து இன்று மாலை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 13.05.2023: சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 190 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 220  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இரவு முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:  13.05.2023: சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 150  முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று மாலை முதல் படிப்படியாக குறைந்து மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். பிறகு மேலும் குறையக்கூடும்.

வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 13.05.2023:  சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து இன்று மாலை முதல்  14.05.2023 காலை வரை மணிக்கு 190 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 220  கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும்.  புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 13.05.2023 முதல்  14.05.2023 நண்பகல் வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
TN POLITICS 2025 : பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
2025 பிளாஷ் பேக்: பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
Embed widget