![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ABP Nadu Exclusive: கனமழையால் அடுத்தடுத்து செயலிழக்கும் மொபைல போன் டவர்கள்: இதுவரை பாதித்த பகுதிகள் இதோ!
பிரத்யேகமாக பெறப்பட்ட டேட்டா அடிப்படையில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிக டவர்கள் செயலிழந்துள்ளன.
![ABP Nadu Exclusive: கனமழையால் அடுத்தடுத்து செயலிழக்கும் மொபைல போன் டவர்கள்: இதுவரை பாதித்த பகுதிகள் இதோ! Mobile phone towers service cut off due to heavy rains in Tamil Nadu ABP Nadu Exclusive: கனமழையால் அடுத்தடுத்து செயலிழக்கும் மொபைல போன் டவர்கள்: இதுவரை பாதித்த பகுதிகள் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/07/9148a6fb698f7a23600628866082bb15_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தொடர் கனமழையால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் கடந்த சில வாரங்களாகவே பாதிப்பை சந்தித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கொட்டித்தீர்த்தகனமழையால், சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாடு முழுக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீர் குடியிருப்புகளில் சூழ்ந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு இதுபுதிதல்ல என்றாலும், இது போன்ற மோசமான சூழல் வரும் போது அவர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சனை, ‛மின்தடை’. அதைக் கடந்து மொபைல் போன் சேவை குறைபாடு மற்றும் வாகன பாதுகாப்பு அற்ற தன்மை இவை தான் சென்னை மக்கள் பெரும்பாலும வெள்ள காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகள். அப்படி ஒரு சூழல் தான் தற்போதும் எழுந்துள்ளது. இன்னும் நிலை கட்டுக்குள் இருக்கிறது என்பது வரை சந்தோசம். ஆனால், மழை நீடிப்பதால் ஒரு பிரச்சனை கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது.
ஆம்...தொலை தொடர்பு சாதனமான மொபைல் போன் சிக்னல் பிரச்சனைகளை தற்போது பல பகுதிகள் உணரத் தொடங்கியிருப்பர். அதற்கும் காரணம் உண்டு. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மொபைல் போன் டவர்கள் இப்போதெ செயலிழக்கத் தொடங்கிவிட்டன. அதற்கு காரணம், அதே மழை தான். மின் பற்றாக்குறை, எரி பொருள் பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக வழக்கமாக செல்போன் டவர்கள் மக்கர் செய்வது வழக்கம் தான் என்றாலும், மழை என வரும் போது அவற்றின் செயல்பாடு முற்றிலுமாக முடங்கிவிடும். பழுது நீக்கவோ, மாற்று ஏற்பாடு செய்யவோ வழியிருக்காது. அதனால் தான் இப்பிரச்சனை தற்போது தலைவலியாக மாறியுள்ளது. இது சென்னை மட்டுக்குமான பிரச்சனை இல்லை. தமிழ்நாடு முழுக்க இந்த பிரச்சனை உள்ளது.
தமிழ்நாட்டில் மொபைல் போன் டவர்களை பராமரிக்கும் பணியை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் மிக முக்கிய தொலை தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களின் டவர்களை பராமரிக்கும் முக்கிய நிறுவனம் ஒன்றின் நிலவரப்படி மதியம் 1 மணி வரை பாதிக்கப்பட்ட டவர்களின் நிலவரம் வெளியாகியிருக்கிறது. இதோ அவற்றின் நிலவரம்...
இடம் | பாதிப்பு எண்ணிக்கை |
வடசென்னை | 38 |
சென்னை(தாம்பரம்) | 1 |
சென்னை(வேளச்சேரி) | 15 |
ஈரோடு | 1 |
மதுரை | 1 |
புதுச்சேரி | 1 |
சிவகாசி | 3 |
தஞ்சாவூர் | 1 |
திருப்பூர் | 1 |
மொத்தம் | 62 |
இந்த டேட்டா அடிப்படையில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிக டவர்கள் செயலிழந்துள்ளன.இது ஒரு நிறுவனத்தின் தகவல் தான். இது போல் மேலும் சில நிறுவனங்கள் உள்ளன. மேலே உள்ள பாதிப்பு தான் அவர்களுக்கும் இருக்க வாய்ப்பு. இதை விட சில பகுதிகள் கூடியிருக்கலாம், குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள்.மழை அதிகரித்தால், இதன் அளவு பல மடங்காகும். குறிப்பாக இரவில் இதனுடைய பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.
Chennai Heavy rain: கருப்பு நிறமாக மாறும் மெரினா கடல்: ஆபத்தா? அச்சுறுத்தலா?
மேலும், செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)