மேலும் அறிய

Stalin Swearing in Ceremony: பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தே கண்டுகளியுங்கள் - திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்..

காலை 9 மணியளவில் பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது

நாளை காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொள்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதற்கான பதவி பிரமாண விழா சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் திமுக மீண்டும் ஆட்சி கட்டிலுக்கு வர இருப்பதால் தொண்டர்கள் அனைவரும் உற்சாகமாக காணப்படுகின்றனர். ஆனால் இது கொரோனா காலம் என்பதால், எளிமையான முறையில் இந்த பதவி ஏற்பு விழா திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின் "கொரோனா காலம் என்பதால் எளிமையாக நடைபெறுகிறது பதவியேற்பு விழா; உங்கள் உடல்நலமே முக்கியம் என்பதால் உடன்பிறப்புகள் இல்லத்தில் இருந்தே கண்டுகளிக்க வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒளி விளக்காய், நம் நாட்டுக்கு எப்போதும் நற்பணியாற்றும் தொண்டனாய்த்  திகழ்ந்துவரும்; அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு, கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து,  தமிழ்நாட்டு மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் தான் நமது தி.மு.கழகம். ஆறாவது முறையும் ஆட்சி அமைக்கும் அரிய  வாய்ப்பைத் தமிழக மக்கள் மனமுவந்து வழங்கி இருக்கிறார்கள்.

தனிப்பெரும்பான்மை கட்சியாக திமுகவுக்கு ஆட்சி அமைக்கும் நல்வாய்ப்பை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4-ஆம் தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூடியது. அக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எனது பெயரை மரியாதைக்குரிய கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் முன்மொழிந்தார்கள். அருமைச் சகோதரர் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் வழிமொழிந்தார்கள். உதயசூரியன் எனும் ஒப்பற்ற சின்னத்தில் வென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருமனதாக இதனை ஏற்றுக் கொண்டார்கள். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் அலங்கரித்த நாற்காலியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அமர்ந்து கோலோச்சிய பொறுப்பில், கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால் உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளர்த்துக் கொண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குத் தமிழக முதலமைச்சராகப் பதவிப் பொறுப்பு ஏற்பு செய்து வைக்க இருக்கிறார் மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களது ஆதரவுக் கடிதத்தை நேற்றைய தினம் காலையில் மேதகு ஆளுநரிடம் ஒப்படைத்து வந்தோம். நாளை (மே 7) காலை 9 மணியளவில் பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர் பெருமக்களும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.

மே - 7, தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொள்ளும் நாளாக மாற இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கிறது. மீண்டும் கழக ஆட்சி - கலைஞரின் கனவு நிறைவேறுகிறது என்ற மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் - மனதின் ஓரத்தில் கவலையும் ஏற்படுகிறது.

இரத்தமும் வியர்வையும் சிந்தி கழகத்துக்காக - நமது வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து - அவர்களுக்கு முன்னால் - அவர்களின் மனம் நிறைவு கொள்ளும் வண்ணம் - பதவியேற்க முடியவில்லையே என்பதுதான் எனது கவலைக்குக் காரணம். இந்த வெற்றிக்குக் காரணமான கதாநாயகர்கள், கழக உடன்பிறப்புகளும் தோழர்களும் ஆகிய நீங்கள்தான். உங்களது அயராத உழைப்பால், அசைக்கவியலாத உறுதியால், கம்பீரத்தால், கடின முயற்சியால் கிட்டியது இந்த வெற்றி. அதனால் மிகப்பெரிய அளவில், தொண்டர்கள் முன்னிலையில், பதவி ஏற்பு விழாவை நடத்தலாம் என்று தேர்தலுக்கு முன்னதாகவே சிந்தித்து வைத்திருந்தேன்.

ஆனால் கொரோனா என்ற பெருந்தொற்று, இரண்டாவது  பேரலையாக  எழுந்து வீசும்  இந்தச் சூழலில்,  அத்தகைய மக்கள் கூடும்  மாபெரும் விழா நடத்த இயலாது. அதனால் ஆளுநர் மாளிகையில்,  மிக எளிய முறையில் நாளை  (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வோர் உடன்பிறப்பின் - தோழரின் உடல்நலன்தான் எனக்கு முக்கியம். அதனால் அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே, விழாவைத் தொலைக்காட்சி நேரலையில் காணுங்கள்! தொண்டர்கள் அனைவரும் உடலால் உங்கள் வீட்டில் இருந்தாலும், உள்ளத்தால் சென்னையிலேதான் - எம்முடனேதான் இருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த உடன்பிறப்பு எனும் பாச உணர்வுதான் மகத்தான வெற்றிக்குக் காரணம். கழக ஆட்சி - கலைஞர் ஆட்சி என்பதே, பல இலட்சக்கணக்கான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்ட சொல் தான். 'இத்தனை தொண்டர்களைப் பெற்றெடுக்க ஒரு தாய் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் நாம்' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அத்தகைய கலைஞர் எனும் ஒரு தாய்ப் பிள்ளைகளான கழக உடன்பிறப்புகள் அனைவரும் இருக்கும் திசை நோக்கி வணங்கி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க நான் தயாராகிவருகிறேன். உங்களது உழைப்பு கழக ஆட்சியை மலர வைத்தது. உங்களது வாழ்த்து எங்களைப் பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்றுசேர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும், சம உரிமையும் கடமையும் உடைய, உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம்! என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
Embed widget