மேலும் அறிய

ரூ.10.55 கோடி மதிப்பீட்டில் கரூர் தொகுதிக்கு திட்டப்பணிகள்.. தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய பகுதிகளுக்கு துணை மின் நிலையங்களை வழங்கியுள்ளார்கள். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இடங்கள் தேர்வு அந்தப் பணிகள் தொடங்கப்படும். 

மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில்   ரூ.10.55 கோடி மதிப்பீட்டில்  55  பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.10.55 கோடி மதிப்பீட்டில்  55 பல்வேறு திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V செந்தில் பாலாஜி அவர்கள் நேற்று (15.04.2023) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த. பிரபுசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம், சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (,கிருஷ்ணராயபுரம்) வணக்கத்திற்குரிய கரூர் மாநகராட்சி மேயர் திருமதி.வெ.‌கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 


ரூ.10.55 கோடி மதிப்பீட்டில் கரூர் தொகுதிக்கு திட்டப்பணிகள்.. தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

 

 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கரூர் மாநகராட்சி ஆண்டாள் கோவில் கீழ்பாக்கம் மற்றும் மேல் பாகம் ஊராட்சிகளில் சாலைகள் அமைக்கும் பணி, வடிகால்கள் அமைக்கும் பணி தடுப்புச் சுவர் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ரூ.10.55 கோடி மதிப்பீட்டில்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அமைக்கப்படாத சாலைகள் பழுதடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி சிறப்பு நிதிகள் பெற்று இந்தப் பணிகள் ஒப்பந்தங்கள் விடப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் இருந்து காற்றாலை மின் உற்பத்தியை எதிர்பார்க்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரே நாளில் 400 மில்லியன் யூனிட் நுகர்வு வந்து உள்ளது ஒரே நாளில் ஏறத்தாழ 40 கோடி யூனிட் மின்சாரத்தை மக்கள் பயன்படுத்தி உள்ளார்கள். அந்த 40 கோடி யூனிட் மின்சாரமும் தடை இல்லாமல் சீராக வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவு பயன்பாடு என்றால் இந்த 40 கோடி யூனிட் மின்சாரம் தான். இது எப்படி சாத்தியம் என்றால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடை காலத்தை கணக்கில் எடுத்து அதற்கு தகுந்தார் போல் செயல்பட்டது தான். கடந்த காலங்களில் தேவைக்கு ஏற்ப வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கப்படும் ஆனால் இந்த முறை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு அதற்கு தகுந்தார் போல் முன்கூட்டியே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தங்கள் விடப்பட்டு ஒரு யூனிட் ரூ.8.50 என்ற அளவிற்கு பெறப்பட்டு வருகிறது. முன்கூட்டியே எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக இந்த செலவில் ஒரு யூனிட் பெறப்படுகிறது இல்லாவிட்டால் ஒரு யூனிட் ரூ.12க்கு பெறவேண்டிய சூழ்நிலை வந்திருக்கும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்த இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்  காரணமாக ரூ. 1312 கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு சேமிப்பு ஆகி உள்ளது.  தற்போது நடந்து கொண்டிருக்கிற சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய பகுதிகளுக்கு துணை மின் நிலையங்களை வழங்கியுள்ளார்கள். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இடங்கள் தேர்வு செய்தப்பட்டு மின்சார வாரியத்திற்கு கொடுக்கப்பட்ட பின்னர் அந்தப் பணிகள் தொடங்கப்படும்.  பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் மின்வாரியம் சார்ந்த புகார்கள் ஏதேனும் இருந்தால் மின்னகத்திற்கு 9498794987  என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உடனுக்குடன் புகார்கள் சரி செய்யப்படும். 

இன்று வரை இப்போது வரை கோடை காலத்தில் சீரான மின்சாரம் வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி எடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்து இருந்தாலோ அல்லது பழுது பார்க்கும் பணி நடைபெற்றாலோ அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு பழுதுகள் சரி செய்யப்படும் அதை வைத்து மின்சாரம் தடைபட்டு உள்ளது என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. எவ்வளவு தேவைகள் இருந்தாலும் அதை சமாளிப்பதற்கு தேவைக்கு ஏற்ப அதிக அளவு மின்சாரம் நம்மிடம் உள்ளது. இன்னும் அதிகம் தேவைப்பட்டாலும் அதை வழங்குவதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது. 

 


ரூ.10.55 கோடி மதிப்பீட்டில் கரூர் தொகுதிக்கு திட்டப்பணிகள்.. தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

 

 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதன்படி துறை ரீதியான கணக்கெடுப்பு மாநில முழுவதும் எடுக்கப்பட்டு பள்ளி,கல்லூரி வழிபாட்டுத் தலங்கள்  அருகில் உள்ளனவா என்பது கணக்கெடுத்து மூடப்பட உள்ளது. ஏற்கனவே 96 கடைகள் மூடப்பட்டுள்ளது புதிய கடைகள் தொடங்கப்படுவதே இல்லை பொதுமக்களின் கோரிக்கையின் காரணமாக சில கடைகள் இடம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது அவ்வாறு செய்யப்பட்டுள்ள கடைகளை புதிய கடைகள் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே மூடப்பட்ட கடைகளையும் சேர்த்து 596 கடைகள் மூடப்பட உள்ளது  இது மொத்த கடைகளில் 11% ஆகும். இருந்த போதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தை பொருத்தவரை நான், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அடிப்படையில் தேவைகள் குறித்து அனைத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி உள்ளார்கள். குறிப்பாக சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கும், அரவக்குறிச்சி பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முருங்கை பதப்படுத்துவதற்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 60 நாட்களுக்குள் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின் பணிகள் தொடங்கப்பட உள்ளது என ..மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்தார்கள்.

 

கரூர் மாவட்டம், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில், ரூ.7.92 லட்சம் மதிப்பீட்டில் சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் பைப் லைன் விஸ்தரிப்பு பணிகளையும், அதே பகுதியில் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் சின்ன ஆண்டாங்கோவில் ரோடு முதல் மேட்டு தெரு வரை தார் சாலை பணிகளையும்,ரூ.10.20 லட்சம் மதிப்பீட்டில் முத்து நகர் மேற்கு பகுதியில் தார் சாலை பணிகளையும், ரோட்டுகடை பகுதியில் ரூ.3.62 லட்சம் மதிப்பீட்டில் மணி வீடு முதல் வளர்மதி வீடு வரை சிமெண்ட் காங்கிரிட் சாலை அமைக்கும் பணிகளையும், சரஸ்வதி நகர் பகுதியில், ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டில் 4வது தெரு செந்தில் வீடு முதல் மல்லிகா வீடு வரை பேவர் பிளாக் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டில் 3வது தெரு கோவிந்தராஜ் வீடு முதல் சுப்பிரமணி வீடு வரை பேவர் பிளாக் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.4.19 லட்சம் மதிப்பீட்டில் 2வது தெரு பன்னீர் வீடு முதல் அபிஷேக் வீடு வரை பேவர் பிளாக் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில், சரஸ்வதி நகரில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கனகராஜ் வீடு முதல் கண்மணி வீடு வரை சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைக்கும் பணிகளையும், ஆண்டாள் கோவில் புதூர் பகுதியில் ரூ.5.15 லட்சம் மதிப்பீட்டில் தனபால் வீடு முதல் பெரியசாமி வீடு வரை சிவன் கான்கிரிட் சாலை அமைக்கும் பணிகளையும்,

 


ரூ.10.55 கோடி மதிப்பீட்டில் கரூர் தொகுதிக்கு திட்டப்பணிகள்.. தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

 

ஆண்டாள் கோவில் மேற்கு ஊராட்சியில்,  ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் மயான கொட்டகை, காத்திருப்போர் கூடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளையும், ரூ.6.35 லட்சம் மதிப்பீட்டில் அக்ரகாரம் பகுதியில் பழனியப்பன் வீடு முதல் சுப்ரமணி வீடு வரை வடிகால் அமைக்கும் பணிகளையும், ரூ.14.75 லட்சம் மதிப்பீட்டில் மொச்ச கொட்டாம்பாளையம் பகுதியில் மாதவன் வீடு முதல் பெரியசாமி வீடு வரை வடிகால் அமைக்கும் பணிகளையும், வேப்பம்பாளையம் கிராம பகுதியில் ரூ.28.74 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.8.64 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய சமுதாய சுகாதார வளாகத்தினை திறந்து வைத்தும், அதே வேப்பம்பாளையம் பகுதியில் ரூ.6.15 லட்சம் மதிப்பீட்டில் பெரியசாமி வீடு முதல் பாலுசாமி வீடு வரை வடிகால் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.5.02 லட்சம் மதிப்பீட்டில் பெரியசாமி வீடு முதல் பாலுசாமி வீடு வரை பேவர் பிளாக் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.7.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாக்கடை மற்றும் உறிஞ்சு குழி அமைக்கும் பணிகளையும், ஆத்தூர் புதூர் கிராம பகுதியில் ரூ.2.96 லட்சம் மதிப்பீட்டில் பொன்னுசாமி வீடு முதல் செல்லமுத்து வீடு வரை பேவர் பிளாக் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.1.72 லட்சம் மதிப்பீட்டில் சாமிநாதன் வீடு முதல் பழனிச்சாமி வீடு வரை பேவர் பிளாக் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.1.72 லட்சம் மதிப்பீட்டில் கோபால் வீடு முதல் கார்த்திக் வீடு வரை பேவர் பிளாக் அமைக்கும் பணிகளையும், மருத்துவ நகர் பகுதியில், ரூ.7.12 லட்சம் மதிப்பீட்டில் 6வது தெரு கோமதி வீடு முதல் சிவானந்தம் வீடு வரை வடிகால் அமைக்கும் பணிகளையும், அதே அதே பகுதியில் ரூ.3.94 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் காங்கிரிட் சாலை அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.1.84 லட்சம் மதிப்பீட்டில் 5வது தெரு தமிழ்ச்செல்வி வீடு முதல் விஜயா வீடு வரை சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.1.84 லட்சம் மதிப்பீட்டில் 4வது தெரு ரவிச்சந்திரன் வீடு முதல் மல்லிகா வீடு வரை சிமெண்ட் காங்கிரிட் சாலை அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.1.84 லட்சம் மதிப்பீட்டில் 3வது தெரு பானுமதி வீடு முதல் லோகநாதன் வீடு வரை சிமெண்ட் காங்கிரிட் சாலை அமைக்கும் பணிகளையும்,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வார்டு-1யில், ரூ.35.21 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு மெயின் சாலையில்,கே. பி.நகர், 3வது கிராஸ்,10வது கிராஸ், கோதை நகர் முதல் யுனிவர்சல் கார்டன் வரை மற்றும் பெரிய கோதூர் கிழக்கு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு 28யில் ரூ.25.00 லட்சம் மதிப்பீட்டில் திருக்காம்புலியூர் பகுதியில் புதிய நகர்புற நலவாழ்வு மையம் கட்டும் பணிகளையும், வார்டு-26யில் ரூ

.17.85 எச்சம் மதிப்பீட்டில் பெரியார் நகர் மெயின் , 4வது குறுக்குத் தெரு மற்றும் 5வது குறுக்குத் தெரு, கணேசா நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு-27யில் ரூ.11.24 லட்சம் மதிப்பீட்டில் அன்பு அப்பார்ட்மெண்ட் அருகில் மகாத்மா காந்தி சாலை பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு-47யில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் பண்டுதகாரன் புதூர் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் கோடங்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ரூ.22.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர பொது சுகாதார நகர்புற நல ஆய்வகம் கட்டிடம் அமைக்கும் பணிகளையும், வார்டு-44யில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் பொன் நகர் பகுதியில் போர்வெல் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணிகளையும், வார்டு -44யில் ரூ.25.00 லட்சம் மதிப்பீட்டில் பாரதிதாசன் நகர் பகுதியில் புதிய நகர்புற நல வாழ்வு மையம் கட்டிடம் அமைக்கும் பணிகளையும், வார்டு -48யில் ரூ3.00 லட்சம் மதிப்பீட்டில் டி.வி.எஸ் நகர் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளையும், வார்டு -42யில் கணபதி பாளையம் வாரி நகர் பகுதியில் ரூ.21.80 லட்சம் மதிப்பீட்டில் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெருகளில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு -37யில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் வ .ஊ. சி தெருப்பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளையும், வார்டு -19யில் சுண்டகெட் பகுதியில் ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில் துளசி மெடிக்கல் பின்புறத்தில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.18.34 லட்சம் மதிப்பீட்டில் ஆதிமாரியம்மன் நகர் 1வது, 2வது மற்றும் 3வது குறுக்குத் தெரு பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு -38 ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் திண்ணப்பா கார்னர் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளையும், வார்டு -15யில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் தில்லை நகர் கிழக்குப் பகுதியில் போர்வெல் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணிகளையும், வார்டு -14யில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.எஸ்.புதூர் பகுதியில் போர்வெல் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளையும், வார்டு -13யில் தொழிற்பேட்டை, சணப்பிரட்டி பகுதியில் ரூ.25.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நகர்புற நலவாழ்வு மையம் கட்டிடம் அமைக்கும் பணிகளையும், வார்டு -17யில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் செல்வா நகர் பகுதியில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகளையும், வார்டு -12யில் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் பசுபதி பாளையம் தெற்கு தெருவில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகளையும், வார்டு-17யில் ரூ.21.92 லட்சம் மதிப்பீட்டில் பசுபதிபாளையம்,அருணாச்சலம் நகர் மெயின் ரோடு தார் சாலை மற்றும் அருணாச்சலம் நகர் விரிவாக்கம் பகுதியில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு -17யில் ரூ.37.80 லட்சம் மதிப்பீட்டில் ராமானூர், கிருஷ்ணா நகர் 1வது,2வது மற்றும் 3வது குறுக்குத் தெருக்களில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு -19யில் ரூ.15.19 லட்சம் மதிப்பீட்டில் கொளந்தானூர் மெயின் சாலை மற்றும் அம்சா நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு -19யில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் ராமானூர் ஆர். பி. கே நகர் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளையும், வார்டு -19யில் ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் கொளந்தானூர், பசுபதி பாளையம் பகுதியில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணிகளையும், வார்டு -20யில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் வ .ஊ. சி தெரு 2வது கிராஸ் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளையும், வார்டு -22யில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் தியேட்டர் பின்புறம் உள்ள வணிக வளாகம் அருகில் போர்வெல் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணிகளையும், வார்டு -24யில் ரூ.295.00 லட்சம் மதிப்பீட்டில் வெங்கமேடு மேம்பாலம் கீழ் அண்ணா சாலை பகுதியில் 40 அடி இணைப்பு சாலையாக வெங்கமேடு மேம்பாலம் முதல் சின்னக் குளத்துப்பாளையம் குகை வழிப்பாதை வரை தார்சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு -10யில் ரூ.120.00 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர் கிழக்கு, வெங்கமேடு, இனாம் கரூர் என்.எஸ்.கே. நகர் பகுதியில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணிகளையும்,வார-4யில் ரூ.11.00 லட்சம் மதிப்பீட்டில் வாங்க பாளையம் தண்ணீர் டேங்க் பகுதியில் முழு நேர நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளையும், என மொத்தம் 55 பணிகளுக்கு ரூ.10.55 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.வாணிஈஸ்வரி,  மாநகராட்சி ஆணையர் திரு.ரவிச்சந்திரன், துணை மேயர் திரு. சரவணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ரூபினா,  மாநகராட்சி மண்டல தலைவர்கள் திரு.கனகராஜ்,  திரு  .அன்பரசன், திரு.இராஜா, திரு.சக்திவேல், தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வினோத், திருமதி.கிறிஸ்டி வட்டாட்சியர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
Breaking News LIVE: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூற்கு உற்சாக வரவேற்பு
Breaking News LIVE: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூற்கு உற்சாக வரவேற்பு
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
Embed widget