(Source: ECI/ABP News/ABP Majha)
Dharmapuram Adheenam Issue: தருமபுர ஆதீன விவகாரம்: சட்டப்பேரவையில் விளக்கமளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு..!
தருமபுரம் ஆதீன விவகாரம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டபேரவையில் விளக்கம் அளித்தார்.
தருமபுரம் ஆதீன விவகாரம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டபேரவையில் விளக்கம் அளித்தார்.
தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சட்டபேரவையில் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், “தருமபுர ஆதீனம் பிரச்சினை குறித்து ஆதீனத்துடன் சுமூகமாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். ஆதீனங்களுடன் நுங்கப்பாக்கம் அறநிலையத்துறை அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த வாரம் கூட முதல்வர் அனைத்து ஆதீனங்களையும் அழைத்து பேசினார். கடந்த வாரம் முதல்வரை சந்தித்த தருமபுர ஆதீனம் பத்திரிக்கையாளர்களிடம் ஆன்மீக அரசு என்று கூறினார். மேலும் நேர்மையான முறையில் அறங்காவலர்களை நியமித்தது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆதீனங்களை வைத்து பல நிகழ்ச்சிகளை அரசு நடத்தியுள்ளது.” என்று பேசினார்.
முன்னதாக, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச் சென்று வீதியுலா செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் மனிதரை, மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என திராவிட கழகம் உட்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த ஆண்டு மே 22 ஆம் தேதி பட்டின பிரவேசம் விழா நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை உதவி ஆட்சியர் பாலாஜி விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஆதீனம் பேட்டியளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்