மேலும் அறிய

Minister Ponmudi: ஒன்றரை மணி நேரம் சாட்சியம் அளித்த முன்னாள் கலெக்டர்: பதற்றத்தில் அமைச்சர் பொன்முடி? என்ன ஆச்சு?

அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜராகி ஒரு மணி நேரம் 35 நிமிடம் சாட்சியம்

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜராகி ஒரு மணி நேரம் 35 நிமிடம் சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள  பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில்  இதுவரை 45 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 28 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததபோது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.

அரசு தரப்பு 46-வது சாட்சியாக விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போது ஓய்வு பெற்றவருமான பழனிச்சாமி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நேரில் ஆஜரானார். அப்போது அவர், பகல் 12 மணிக்கு இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார். அவர், தான் கடந்த 2008 முதல் 2011 வரை விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றியதாகவும், வானூர் தாசில்தார், விழுப்புரம் கோட்டாட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும், அவர்கள் சமர்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்தும் ராஜமகேந்திரன் பெயரிலும், கவுதமசிகாமணி பெயரிலும் செம்மண் குவாரி உரிமத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது என்றுகூறி சாட்சியம் அளித்தார்.

அப்போது செம்மண் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக நீதிபதி கேட்ட சில கேள்விகளுக்கும் பழனிச்சாமி, உரிய பதில்களை  1 மணி நேரம் 15 நிமிடம் நேரமாக சாட்சியம் அளித்தார். பிறகு  உணவு இடைவேளை முடிந்து மீண்டும் 2.10 மணிக்கு முன்னாள் ஆட்சியர்  பழனிச்சாமி ஆஜரானார். அவரிடம் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த விசாரணை 2.30 மணிக்கு முடிவடைந்தது. முன்னாள் ஆட்சியர்  பழனிச்சாமி அளித்த சாட்சியம் மற்றும் அவரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை முழுவதையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இதன் வழக்கு விசாரணை மீண்டும் நாளை  நடைபெறும் என உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget