Watch Video: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து.. மீட்பு காட்சிகள்..
விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் காட்சிகளும், உயிருக்கு போராடியவர்களை மீட்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
![Watch Video: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து.. மீட்பு காட்சிகள்.. Mi17 V5 Helicopter accident bipin rawat and madhulika rawat and army officers Recovery videos Watch Video: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து.. மீட்பு காட்சிகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/5ad5f4118cbe551e58597f655862851e_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 14 பேர் Mi17 V5 என்ற ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டரானது கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.
அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியகியுள்ளது. இதில் பயணம் செய்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - மீட்பு பணிகள் தீவிரம் https://t.co/wupaoCQKa2 | #TamilNadu | #HelicopterCrash | #Coonoor #Ooty #BipinRawat pic.twitter.com/GuxK4r0Cbr
— ABP Nadu (@abpnadu) December 8, 2021
ஆனால், பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோரின் நிலை என்னவென்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் காட்சிகளும், உயிருக்கு போராடியவர்களை மீட்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
BREAKING
— DD News (@DDNewslive) December 8, 2021
UPDATE:
4 bodies have been recovered from the military helicopter crash site in the Nilgiris and shifted to Military hospital in Wellington; 3 injured persons also rescued and moved to hospital: District officials#Ooty #BipinRawat https://t.co/HLiYjoceg8
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Chopper Crash Ooty LIVE: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்தாக தகவல்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)