மேலும் அறிய

சற்றே குறைந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து: இன்றைய நிலவரம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 555 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 544 கன அடியாக குறைந்துள்ளது. 

சற்றே குறைந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து: இன்றைய நிலவரம்

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 71.17 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.71 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சற்றே குறைந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து: இன்றைய நிலவரம்

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.68 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.32 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 916 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 974 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.29 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

தலைப்பு செய்திகள்

RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரமுகர்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!
பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரமுகர்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: த.வெ.க. பெண் நிர்வாகி அதிரடியாக நீக்கம்!
அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: த.வெ.க. பெண் நிர்வாகி அதிரடியாக நீக்கம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Embed widget