மேலும் அறிய
TVK Vijay : தவெக சார்பில் நடைப்பெற்ற பரிசு வழங்கும் விழா வெற்றிகரமாக முடிந்தது!
TVK Vijay : தவெக சார்பில் இன்று நடைப்பெற்ற இரண்டாம் கட்ட பரிசு வழங்கும் விழாவில் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார்.

தவெக பரிசு வழங்கும் விழா
1/6

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஜுன் 28 ஆம் தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் பரிசு வழங்கும் விழா நடந்தது.
2/6

ஆளப்போறான் தமிழன் பாடல் ஒலிக்க நடிகர் விஜய் மேடையில் ஏறினார். “எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், நீட் பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டுதான் வந்தேன். நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என விஜய் பேச தொடங்கினார்.
3/6

"தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் விலக்கை ஒன்றிய அரசு நீட் விலக்கு தர வேண்டும். இதற்கு தீர்வாக முதலில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்” - விஜய்
4/6

"இடைக்கால தீர்வு வேண்டுமென்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி, சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி, அதில் கல்வி மற்றும் சுகாதராத்தை சேர்க்க வேண்டும்” - விஜய்
5/6

"மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும் அது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கு” - விஜய்
6/6

நீட் தேர்வை பற்றி பேசிய பின்னர், மாணவர்களுக்கு ஒன்றின் பின் ஒன்றாக பரிசு வழங்கப்பட்டது.
Published at : 03 Jul 2024 01:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion