மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 24 மணி நேரத்தில் 7 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர் வரத்து 64,033 கன அடியில் இருந்தது 79,682 கன அடியாக அதிகரிப்பு.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 71,777 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 64,033 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 79,682 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 24 மணி நேரத்தில் 7 அடி உயர்வு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 82 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 43.97 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லாத காரணத்தினால் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 24 மணி நேரத்தில் 7 அடி உயர்வு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம்?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம்?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம்?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம்?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Ruturaj Gaikwad: முதல் பந்து பவுண்டரி..இரண்டாவது பந்தில் காத்திருந்த அதிர்ச்சி!ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு என்னாச்சு?
Ruturaj Gaikwad: முதல் பந்து பவுண்டரி..இரண்டாவது பந்தில் காத்திருந்த அதிர்ச்சி!ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு என்னாச்சு?
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
அரசியலில் கால்பதிக்க தயாராகும் விவசாயிகள் - காரணம் இதுதான் 
Embed widget