TN Rain Relief Fund: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்..! நாளை முதல் விநியோகம்..
மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது. நிவாரண நிதிக்காக 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இந்த அரசாணையில்
” வடகிழக்கு பருவமழை 29.10.2022 அன்று தமிழகத்தில் தொடங்கியது மற்றும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு மழை பதிவானது. 10.11.2022 முதல் 11.11.2022 வரை 1198% அதிகப்படியான மழையைப் பதிவாகியுள்ளது.
கன மற்றும் மிக கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மற்றும் மாவட்டத்தில் குறிப்பாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் 14.11.2022 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, சீர்காலி மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000/- நிவாரணம் வழங்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மாநில செயற்குழுவின் ஒப்புதலின்படி, அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், அவர்களின் உத்தரவில், அரசு ரூ. 16,16,47,000/- கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்கல் மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் பாதிக்கப்பட்ட 1,61,647 குடும்பங்களுக்கு ரூ.1000/- இலவச நிவாரணம் வழங்கப்படும்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான RE/ இறுதி மாற்றியமைக்கப்பட்ட ஒதுக்கீட்டில் தேவையான கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அரசாங்கம் மேலும் உத்தரவிட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை அளவுகள் கடந்த அக்டோபர் 01 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 172 மி.மீ மழையளவும், மணல்மேடு 65 மி.மீ மழையளவும், சீர்காழியில் 128.7 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 98.6 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 61.2 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் ( 436.2 மில்லிமீட்டர்) மழையும் குறைந்த பட்சமாக மணல்மேடில் 160 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மயிலாடுதுறையில் 161.60 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 316.8 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 184 மி.மீ மழையளவும் பதிவானது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த வரலாறு காணாத மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.