கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக சரிவு
டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 64 ஆயிரத்து, 563 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,420 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 65 ஆயிரம் கன அடியாக சரிந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 73 ஆயிரத்து, 485 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 65 ஆயிரத்து, 983 கன அடியாக தண்ணீர் வரத்து சரிந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 64 ஆயிரத்து, 563 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,420 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,142 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,142 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 2,850 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.44 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 33.26 கனஅடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24 அடியாக இருந்தது. அணையில் இருந்து நொய்யல் பாசன வாய்க்காலில், 127 கன அடிதண்ணீர் திறக்கப்பட்டது.
அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பு.
அரவாக்குறிச்சி பகுதி ஆற்றில் தண்ணீர் இருக்கறையையும் தொட்டு செல்கிறது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் அரவக்குறிச்சி பகுதி அமராவதி ஆற்றில் இருகரையும் தொட்டுச் செல்கிறது. கொத்தப்பாளையம் தடுப்பணைக்கு கடந்து செல்கின்றது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் 447 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவும் உள்ளது.
தற்போது 80 அடி நீர் உள்ளது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றது. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஏக்கருக்கு மேல் அரவக்குறிச்சி வட்டத்தில், கொத்தப்பாளையம், சின்ன தாராபுரம், ராஜபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் பல்வேறு பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், அமராவதி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வரும் காரணத்தால், அமராவதி அணைக்கு நீர்வரத்து தினசரி அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. தற்போது 88 அடிக்கு மேல் உயரம் உள்ளது.
இதனால் அமராவதி அணையில் இருந்து சராசரியாக 2,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி குத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து, கரூர் முக்கிய செல்கின்றது. இதன் காரணமாக வீடுகளின் ஆழ்துழாய் கிணறுகள் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.