மேலும் அறிய

IAS Officers Transfer:அதிரடியாக மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்..எதிர்கால திட்டத்துடன் களமிறங்கிய தமிழ்நாடு அரசு!

IAS Reshuffle: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அறிவியல் நகரத் திட்ட துணைத் தலைவராக தேவ் ராகஜ் தேவ், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக அருண் ராய், சிப்காட் நிர்வாக இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆகாஷ் ஆகிய மூவரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக உள்ள அருண் ராய், கூடுதல் பொறுப்பாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து அரசு அறிவித்திருந்தது. ஒவ்வொரு மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை மேம்படுத்தவும், அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் தாக்கரை நியமித்து தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.  

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் 3 மாவட்டங்களிலும் மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள், சாலை மேம்பாடு, அணைகளின் கட்டமைப்பு, கிராமப்புறங்களில் உள்ள நீரிலைகள், ஊரணிகள், கோவில் குடிநீர் தொட்டி, உள்லிட்டவற்றை கண்காணிப்பார்கள் என்றும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புறங்களில் நிலுவையில் இருக்கும் பட்டா மாற்றம், பொறம்போக்கு நிலத்தை பராமரித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சேரும் திடக்கழிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும் பணிகளையும் இந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெரு விளக்கு, குடிநீர் குழாய், பழுதடைந்த சாலைகளின் சீரமைப்பு பணிகளையும் அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், மின் இணைப்பு துண்டிப்பு, பள்ளிகளில் கழிவறை பராமரிப்பது, பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மதிய உணவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளையும் இந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட மாவட்டங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள், திட்டங்களின் செயல்பாடு, குறைகள் குறித்து அரசுக்கு நேரடியாக தெரிவிப்பார்கள் என்றும்  அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
Embed widget