மேலும் அறிய
Advertisement
13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..தமிழ்நாடு அரசு அதிரடி..!
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக தரேஷ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக தரேஷ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக வெங்கடாசலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக கலையரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலத்துறை ஆணையராக அமுதவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறையின் கூடுதல் செயலாளராக மகேஷ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனராக கஜலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion