மேலும் அறிய
பாலியல் புகாரில் சிக்கிய நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த விவகாரம் தொடர்பாக பெண்டிரைவ் ஒன்று விசாரணைக்கக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சி சம்பவத்தை விட கொடுமையான சம்பவங்கள் உள்ளன - அகில இந்திய மாதர் சங்கம் தரப்பில் வாதம்
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன். இவர் மீது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் கொடுத்த புகாரில் போக்ஸோ உட்பட 14 பிரிவுகளில் மூன்று வழக்குகளை தாடிக்கொம்பு போலிஸார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கல்லூரி தாளாளர் காவல்துறையினர் கைது செய்யாமல் இருந்ததை கண்டித்து மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், காவல்துறையினர் அவரை, பழனி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில், தாளாளர் ஜோதிமுருகனுக்கு கீழமை நீதிமன்றம் ஒரே வாரத்தில் ஜாமீன் வழங்கியது.எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அரசு தரப்பில் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசுத்தரப்பில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு இனிய செய்யப்பட்டது.இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் சுகந்தி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர், முன்பாக விசாரணைக்கு வந்தது. ஜோதிமுருகன் தரப்பில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தனது ஜாமினை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.
அகில இந்திய கூட்டமைப்பின் சார்பில், " மனுதாரர் ஜாமினில் வெளியே இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. அதோடு, பெண்டிரைவ் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சி சம்பவத்தை விட கொடுமையான சம்பவங்கள் உள்ளன. ஆகவே மனுதாரரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.அதையடுத்து நீதிபதி, " அந்த பெண்டிரைவ் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.அகில இந்திய மாதர் சங்கம் சார்பில், விசாரணைக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை கடந்த அதிமுக ஆட்சியில், அதிகாரிகள் துணையோடு அன்னபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முறைகேடாக குவாரி நடத்தி பல நூறு கோடி ரூபாய் மோசடி நடத்தியது தெரிய வந்தது.இது தொடர்பாக அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம் அன்னபிரகாஷ் குடும்பத்தினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க அன்னப்பிரகாஷ் மகள்கள் சிவனேஸ்வரி, ஜெயா, மற்றும் ஜெயபிரகாஷ் பாண்டி, லதா, பாப்பம்மாள் உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து நீதிபதி," மனுதாரர்களை விசாரணைக்கு ஆஜராக கூறி தான் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரிடம் போலீசார் விசாரணை செய்வது என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மனுதாரர்களை கைது செய்ய வேண்டுமானால் குறிப்பிட்ட கீழமை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று போலீசார் கைது செய்யலாம். எனக் கூறி பிரகாஷின் குடும்பத்தினரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion