உயர்கிறதா தியேட்டர் பார்க்கிங் கட்டணம்? மறுநிர்ணயம் செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவு!
சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![உயர்கிறதா தியேட்டர் பார்க்கிங் கட்டணம்? மறுநிர்ணயம் செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவு! Madras High Court ordered Tamil Nadu government to re-fix the parking charges in theaters the Chennai Corporation உயர்கிறதா தியேட்டர் பார்க்கிங் கட்டணம்? மறுநிர்ணயம் செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/01/016e634fa6efc600964abf28dca106411662029016994175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையங்களில் வாகனம் நிறுத்த அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், திரையரங்குகளில் மட்டும் வாகன நிறுத்த கட்டணம் ரூ.10, ரூ 20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் குறைவாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
View this post on Instagram
திரையரங்குகளில் வாகன நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து கடந்த 2017 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த 2017 ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், ”தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் அதிகபட்ச பார்க்கிங் கட்டணமாக கார்களுக்கு ரூ.20 மற்றும் மோட்டார் பைக்குகளுக்கு ரூ.10 வசூலிக்கப்படும். இருப்பினும், மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு இந்த கட்டணங்கள் பொருந்தாது. ஏனெனில் அவை வெவ்வேறு விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றது” என்று உத்தரவிட்டார். தற்போது அவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும் படிக்க : Rain Update: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
இதுகுறித்த கடந்த 2017 ம் வெளியான அறிக்கையில், “ மாநகராட்சி மற்றும் சிறப்பு தர நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.20ம், மோட்டார் பைக்குகளுக்கு ரூ.10ம் வசூலிக்கலாம். நகராட்சிகளில், கார்களுக்கு, 15 ரூபாயும், மோட்டார் சைக்கிளுக்கு, 7 ரூபாயும் கட்டணம்; நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில், 5 ரூபாய் மற்றும் 3 ரூபாய். சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது.
தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1955-ஐத் திருத்துவதன் மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் விருப்பப்படி விலையை மாற்றவோ அல்லது பார்க்கிங்கிற்கு அதிக கட்டணம் வசூலிக்கவோ முடியாது.
மால்களால் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம் அவர்களால் கட்டுப்படுத்தப்படும், திரையரங்குகள் அல்ல. இந்தத் திருத்தம் எஸ்கேப்பிற்குப் பொருந்தாது, ஆனால் சத்யம் தியேட்டர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)