மேலும் அறிய

டீ கடை மூடல்.. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு அவசியம் - தமிழக அரசு

தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொரோனா பரவல் கட்டுப்பாடு தொடர்பான அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவில் எட்டப்பட்ட தீர்மானங்களை அடுத்து ஊரடங்கை மிகக் கடுமையானதாக்க வேண்டும் என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதனடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை (15-05-2021) காலை 4 மணிமுதல் அமலுக்கு வர இருக்கிறது. 

1. புதிய கட்டுப்பாடுகள்

• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள். இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

• ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.

• ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

• பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

• காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

• தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

* மின் வணிக நிறுவனங்கள்(e-commerce) மதியம் 02.00 செயல்பட மணி முதல் மாலை 06.00 மணி முடிய
செயல்பட அனுமதிக்கப்படும். 

இ-பதிவு முறை (e-Registration)

• வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை (e-Registration) கட்டாயமாக்கப்படும்.

• அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை (Elderly care) போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பதிவுமுறை (e-Registration) (https://eregister, tnega. org). கட்டாயமாக்கப்படும்.

• இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs LSG LIVE SCORE: சென்னை - லக்னோ மோதல்; 100 ரன்களை கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
CSK Vs LSG LIVE SCORE: சென்னை - லக்னோ மோதல்; 100 ரன்களை கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!
Prakashraj - Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. பிரகாஷ்ராஜ் விமர்சனம்
Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

EPS on PM Modi : இது தான் பாஜக எதிர்ப்பா? மயில் இறகால் வருடிய EPS? அதிமுக அறிக்கையால் சர்ச்சை!Jayakumar pressmeet  : ”ஒரு PHOTO காமிங்க... 1 கோடி தரேன்” சவால்விட்ட ஜெயக்குமார்Jagan Mohan Reddy Net Worth : பணக்கார முதலமைச்சர்..எகிறும் ஜெகன் மோகன் GRAPH! இத்தனை கோடியா?Jayakumar Pressmeet  : ”என் பேரனுக்கே VOTE இல்ல! சொதப்பிய தேர்தல் ஆணையம்” கொந்தளித்த ஜெயக்குமார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs LSG LIVE SCORE: சென்னை - லக்னோ மோதல்; 100 ரன்களை கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
CSK Vs LSG LIVE SCORE: சென்னை - லக்னோ மோதல்; 100 ரன்களை கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!
Prakashraj - Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. பிரகாஷ்ராஜ் விமர்சனம்
Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Fact Check:  காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Heat Wave : வெப்ப அலை எச்சரிக்கை : பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்!?
Heat Wave : வெப்ப அலை எச்சரிக்கை : பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்!?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக்கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பரபரப்பு
ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக்கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பரபரப்பு
Embed widget