HOLIDAY: ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
வார விடுமுறை கிடைத்தால் வெளியூர்களுக்கு சுற்றுலா அல்லது உறவினர் வீட்டிற்கு செல்லும் மக்களுக்கு கூடுதல் குஷியாக ஜனவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி விடுமுறை
விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான், அதை விட அரசு ஊழியர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். அந்த வகையில் வார விடுமுறையோடு சேர்த்து கூடுதல் விடுமுறை நாட்கள் வந்தால் சுற்றுலாவிற்கு புறப்பட்டு விடுவார்கள். அதற்கு ஏற்றார் போல வருகிற ஜனவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதி வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியில் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உள்ளூர் விடுமுறை
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 02.01.2026 அன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதனை ஈடு செய்யும் வகையில் 10.01.2026 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 10.01.2026 அன்று வழக்கம்போல் இயங்கும்.
10ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும்
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 02.01.2026 வெள்ளிக்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





















