Rain Alert: சண்டே வெளியே போறீங்களா.. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த ஊர் தெரியுமா?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மற்றும் ஜூன் பாதி வரை வெயில் இயல்பான அளவை விட அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகள் திறப்பு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது. பொதுமக்களும் பெரிதும் அவதியடைந்தனர். ஆனால் ஜூன் மாதத்தின் பிற்பகுதி யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இப்படியான நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் வானிலை நிலவரம்
சென்னையில் இன்றைய தினம் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.