மேலும் அறிய

TN Rain Alert: தமிழகத்தில் இன்றைய மழை அப்டேட் இவ்வளவுதான்... தெரிஞ்சிக்கோங்க!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழைக்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில்  அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழைக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

25.11.2022 முதல் 28.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கனித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு:

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதிகபட்சமழைப்ப்பொழிவு:

தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) 10, திருத்தணி (திருவள்ளூர்), காஞ்சிபுரம்  தலா 7, கரூர் (தர்மபுரி), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 5, குடியாத்தம் (வேலூர்), கலவை  PWD (ராணிப்பேட்டை), புதுச்சேரி, பூண்டி  (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4, ஊத்துக்கோட்டை  (திருவள்ளூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), கலவை AWS (ராணிப்பேட்டை), திருத்தணி  PTO (திருவள்ளூர்) தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்: 

தெற்கு ஆந்திர நிலப்பரப்பு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தற்பொழுது தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. இது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக இருந்து மேலும் வலு குறைந்து வருகிறது. இன்று வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து தினங்களில் ஓருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டை கொளுத்துவதா? - மதுக்கடைகள் தனியார்மயத்திற்கு அன்புமணி எதிர்ப்பு!
மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டை கொளுத்துவதா? - மதுக்கடைகள் தனியார்மயத்திற்கு அன்புமணி எதிர்ப்பு!
Theni power cut: தேனியில் நாளை (30-07-2026) மின் தடை ஏற்படும் ஏரியாக்களின் லிஸ்ட் இதுதான்
தேனியில் நாளை (30-07-2026) மின் தடை ஏற்படும் ஏரியாக்களின் லிஸ்ட் இதுதான்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget