TN Headlines :பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை..ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்- முக்கிய செய்திகள்
TN Today Headlines: இன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம்.
TN Assembly Session: சட்டப்பேரவையில் நடந்தது என்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி ஆளுநர் தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர், கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக ஒரு அவதூறைத் தொடங்கினார் மற்றும் நாதுராம் கோட்சே போன்றோரை ஆளுநர் பின்பற்றுவதாக கூறினார். சபாநாயகர் தனது தகாத நடத்தையால் தனது நாற்காலியின் கண்ணியத்தையும், சபையின் கருணையையும் குறைத்தார். சபாநாயகர் ஆளுநருக்கு எதிராக கடுமையாக பேசியபோது, ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
TN Assembly: ; ஆளுநர் செய்வது சரியா? - சபாநாயகர் அப்பாவு பதிலடி
பிப்ரவரி 15 ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 21 ஆம் தேதி இரண்டு வேளைகளாக பொது பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். 22 ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரையுடன் சட்டப்பேரவை நிறைவு பெறும்.மேலும் படிக்க
TN Assembly: "இருங்க இனிதான் ஜன கன மண பாடுவோம்" ஆளுநரிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு!
இன்று காலை சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநராக பதவி வகிப்பவர்கள் வாசிப்பது மரபு. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார். மேலும், அவை தொடங்கும் முன்பே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்த பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார். அப்போது, சபாநாயகர் அப்பாவு இருங்க.. இனிதான் ஆளுநர் ஜனகனமண பாடுவோம் என்று கூறினார். மேலும் படிக்க
TN Assembly Session: ”சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல”.. வெள்ள நிதி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு அதிரடி!
ஆளுநர் படிக்காவிட்டாலும் அரசு தயாரித்து கொடுத்தபடியே அவைக்குறிப்பில் உரை இடம்பெறும் என்று அப்பாவு தெரிவித்தார். அதன்பின் பேசிய அவர், “ தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம். கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே அவையின் மரபு. ஆளுநர் மனதில் இருப்பதை கூறியுள்ளார். அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒன்றும் உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து ரூ.50,000 கோடி பெற்றுத்தருவாரா ஆளுநர்? சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு தமிழ்நாடு மக்களும், சட்டமன்றமும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை” என்று தெரிவித்தார். மேலும் படிக்க
சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழந்த சோகம்
சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க