மேலும் அறிய

TN Assembly: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் செய்வது சரியா? - சபாநாயகர் அப்பாவு பதிலடி

தமிழ்நாடு அரசு எழுதி கொடுக்கும் உரைக்கு அனுமதி கொடுத்த பின் தான் பிரிண்ட் செய்யப்படுகிறது. அதைத்தான் வாசிக்கிறார்கள். அதில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.

ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி  வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது.  அப்போது பேசிய அவர், தேசிய கீதம் உரையின் துவக்கத்தில் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். தமிழக அரசின் உரையில் உள்ளவற்றை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி அதனை படிக்காமல் புறக்கணித்தார். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார். 

பிப்ரவரி 22 வரை சட்டப்பேரவை 

தொடர்ந்து நிகழ்வு முடியும் முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிப்ரவரி 15 ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 21 ஆம் தேதி இரண்டு வேளைகளாக பொது பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். 22 ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரையுடன் சட்டப்பேரவை நிறைவு பெறும்” என தெரிவித்தார். 

ஆளுநர் குற்றச்சாட்டுக்கு பதில் 

தேசிய கீதம் இசைத்து தான் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கிறோம். சட்டமன்றத்திற்குள் வந்த உடனே பேரவை விதி 76/1ன் படி தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர் உரை, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநரை அழைத்து அவரது உரையுடன் தொடங்கப்படுவது மரபாகும். இப்படிப்பட்ட நிலைப்பாட்டை ஆளுநர் எடுப்பதால் தான் பல மாநிலங்களில் அவர்களை அழைப்பதே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் மாண்பு, சட்டத்தை மதிப்பதால் ஆளுநரை அழைக்கிறோம். 

தமிழ்நாடு அரசு எழுதி கொடுக்கும் உரைக்கு அனுமதி கொடுத்த பின் தான் பிரிண்ட் செய்யப்படுகிறது. அதைத்தான் வாசிக்கிறார்கள். அதில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி எந்த வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை. அதில் ஒரு பகுதியை அவர் வாசித்து விட்டு பின்  கடைசி பக்கத்தை வாசித்து முடித்தார். அதன்பிறகு அவை மாண்புபடி உட்கார்ந்து தேசிய கீதம் இசைக்கும் வரை இருக்க வேண்டும். 

நானும் தலைமை செயலாளரும் அழைக்க சென்றபோது எங்களிடம் எதையும் சொல்லவில்லை. வருகிறேன் என்று தான் சொன்னார். அதேபோல் ஆளுநர் உரையில் நான் சொல்லியதை எல்லாம் நீக்கவில்லை. அதனால் கடைசி பக்கத்தை படிக்கிறேன் என சொல்லாமல் எனக்கு எதுவுமே இதில் பிடிக்கவில்லை என சொல்வது சரியா?  தமிழ்நாட்டுக்கு என்று ஒரு மரபு உள்ளது. அதனை ஏன் அவர் மீற வேண்டும் என சபாநாயாகர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
தங்க கவசம், வைரவேல் தரிசன மகிமை! சுவாமிமலை முருகனின் அற்புத ரகசியங்கள்!
தங்க கவசம், வைரவேல் தரிசன மகிமை! சுவாமிமலை முருகனின் அற்புத ரகசியங்கள்!
செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! ஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 3 நாட்கள் லீவ்! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! தொடர்ந்து 3 நாட்கள் லீவ்! ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget