மேலும் அறிய

பணம் கேட்டு தொந்தரவு - பாஜகவிலிருந்து விலகிய மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு.. அடுத்த டிக்கெட் காலி

கிருஷ்ண பிரபு -  மாநில செயலாளர் தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அண்ணாமலை பாகுபாடுடன் செயல்படுவதாகவும் கூறி ராஜினாமா செய்துள்ளார்.

பா.ஜ.க விலிருந்து மேலும் ஒரு மாநில செயலாளர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அண்ணாமலை பாகுபாடுடன் செயல்படுவதாகவும் கூறி பாஜக மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா செய்துள்ளார்.

அது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ”மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும், மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும், கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது. அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும், மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும் மேலும் எங்களிடமிருந்து தொண்டர்கள் நிர்வாகிகளிடம் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வது, மேலும் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பதம் பார்த்து விட்டனர். மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சனைகளையும் நேரடியாக உங்களிடம் சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

இதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாவட்ட தலைவர் மகா, சுசீந்திரன், நரசிங்க பெருமாள் இவர்களை எல்லாரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய நீங்கள் பொறுப்பாக செயல்படவில்லை. பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்பது தான்  உண்மை. இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன, இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே ஆபத்து வரும். இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.  

Governor Ravi On Tamil: ’இந்தியை விட தமிழ் பழமையானது, ஆனால்..’ ஆளுநர் ரவி என்ன பேசினார்?

Governor RN Ravi: தென்னிந்தியாவில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேருவோரில் 90% பேர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்: ஆளுநர் ரவி பரபரப்புப் பேச்சு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Embed widget