மேலும் அறிய

Governor RN Ravi: தென்னிந்தியாவில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேருவோரில் 90% பேர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்: ஆளுநர் ரவி பரபரப்புப் பேச்சு

தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேருவோரில் 90% பேர்  பாப்புலர்‌ ஃபிரண்ட்‌ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேருவோரில் 90% பேர்  பாப்புலர்‌ ஃபிரண்ட்‌ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார். 

’எண்ணித் துணிக கருமம்’ என்ற பெயரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி சென்னை ராஜ்‌ பவனில் நேற்று  கலந்துரையாடினார்‌.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி இந்திய குடிமைப்பணி குரூப்‌ 1 தேர்வுகளுக்கு தயாராகும்‌ மாணவ- மாணவியருடன்‌ சென்னை ராஜ்‌ பவனில்‌ உள்ள தர்பார்‌ அரங்கில்‌ நேற்று கலந்துரையாடினார்‌. அதை அடுத்து வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம்‌ குறித்து ஒரு மாணவர்‌ எழுப்பிய கேள்விக்கு ஆளுநர்‌ பதிலளித்தார்‌.

வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடை ஆக பெறுகிறது. அது ஒருமுறை என்றால்‌ பிரச்சனை இல்லை. தொடர்ச்சியாக அத்தகைய நன்கொடை வருமானால்‌ அங்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வரும்‌. இந்த சட்டம்‌ மூலம்‌ அனைத்து வெளிநாட்டு நன்கொடைகளும்‌ மத்திய உள்துறை அமைச்சகத்தின்‌ கண்காணிப்பின்கீழ்‌ வரும்‌. இப்படி வரும்‌ நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌ சில நிறுவனங்கள்‌ தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக தென்‌ தமிழ்நாட்டில்‌ அணுசக்தி திட்டத்துக்கான வேலையை தொடங்கும்‌ போதெல்லாம்‌ பாதுகாப்பு அச்சுறுத்தல்‌, காலநிலை மாற்ற தாக்கம்‌, அணுஉலை வெடிக்கலாம்‌, மனித உரிமை மீறல்கள்‌ என்றெல்லாம்‌ சொல்லி போராட்டங்கள்‌ வெடித்தன. யாரும்‌ பசி, பட்டினியோடு நீண்ட காலம்‌ போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால்‌ இருப்பவர்கள்‌ சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்‌
இருந்தெல்லாம்‌ பெரிய அளவில்‌ நிதி வந்தது தெரியவந்தது.

வடகிழக்கு மாநிலங்களில்‌ போலி நிறுவனங்களை வெளிநாடுகளில்‌ ஆரம்பித்து ரூ.200 கோடி‌ ரூபாய்‌ வரை ஆண்டுகோறும்‌ வந்தன. அவை மதமாற்றத்துக்காக பயன்படுத்தப்பட்டன. இத்தகைய செயல்பாடுகளை எப்படி அனுமதிக்க முடியும்‌? இதுபோன்ற தேசநலனை பாதிக்கும்‌ விவகாரங்களில்‌ வெளிநாட்டு நன்கொடை பயன்படுத்துவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நீண்ட ஆண்டுகள்‌ இந்த சட்டம்‌ பெயரளவிலும்‌, சில இடங்களில்‌ ஊழல்‌ காரணமாகவும்‌ நிறைவேற்றப்படாமல்‌ இருந்தது. 

வெளிநாட்டிலிருந்து பண உதவி 

கேரளாவில்‌ விழிஞ்சம்‌ துறைமுகம்‌ அமைக்கும்‌ திட்டம் பெங்களுரிலிருந்து செயல்படும்‌ ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்‌ என்கிற மிகப்பெரிய மனித உரிமைகள்‌ அமைப்பின்‌ இடையூறு காரணமாக ஓராண்டுக்கும்‌ மேலாக தடைபட்டது. இந்தியாவின்‌ பசுமை தீர்ப்பாயம்‌, உச்ச நீதிமன்றம்‌, அரசு அனைத்தும்‌ சரியான திட்டம்‌, எந்த பிரச்சனையும்‌ இல்லை என்று சொல்லியும்‌ திட்டம்‌ நிறைவேற்றப்பட முடியவில்லை. இந்த ஆம்னெஸ்டி அமைப்பு குறித்து விசாரணை நடத்தியபோது அவ்வமைப்புக்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

என்னுடைய தனிப்பட்ட கருத்து, இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக அந்நிய நிதி மூலம்‌ செயல்படும்‌ இத்தகைய நிதி உதவிகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும்‌, அது தற்போது இயலவில்லை ஆனால்‌ போக போக அது சரியாகும்‌.

தேச நலனைப் பாதுகாக்க வேண்டும்

மக்கள்‌ தங்கள்‌ உரிமைக்காக, அரசுக்கு எதிராக போராடலாம்‌. அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அரசியலமைப்பில்‌ கூறப்பட்டுள்ளது. அதே நேரம்‌ தேச நலனை பாதுகாக்க அரசு தன்னுடைய பணியை செய்துதான்‌ ஆகவேண்டும்‌. வேண்டுமென்றே தேச ஒற்றுமைக்கு குந்தகம்‌ விளைவிக்க முயற்சி செய்வதும்‌ வளர்ச்சியை தடுக்க முயல்வதும் மிகவும்‌ தவறு.

பாப்புலர்‌ பிரண்ட்‌ அமைப்பு இந்தியா சகோதரத்துவ அமைப்பு என்று ஒரு அமைப்பை ஆரம்பித்துக்கொண்டு வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று இந்தியாவில்‌ தீவிரவாத நடவடிக்கையில்‌ ஈடுபடுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து ஆப்கானிஸ்தான்‌, ஈரானுக்கு சென்று ஐஎஸ்‌ அமைப்பில்‌ சேருபவர்களில்‌ 90% பேர்‌ பாப்புலர்‌ ஃபிரண்ட்‌ அமைப்பின்‌ மூலமாகவே செல்கின்றனர்‌.'' 

இவ்வாறு ஆளுநர்‌ பேசியதாக ஆளுநர்‌ மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Embed widget