(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Highcourt Chief Judge: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் கே.ஆர். ஸ்ரீராம் - கொலீஜியம் பரிந்துரை
Chennai Highcourt Chief Judge: மும்பையை பூர்வீகமாகக் கொண்ட கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
Chennai Highcourt Chief Judge: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கே.ஆர். ஸ்ரீராமை நியமிக்கலாம் என கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது அவர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி:
சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.மகாதேவனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் உயர்த்தியுள்ளது. அவருக்குப் பதிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த கே.ஆர். ஸ்ரீராம்:
நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மும்பையில் பிறந்தார் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் நிதிக் கணக்கியல் மற்றும் மேலாண்மை மற்றும் எல்எல்பி ஆகியவற்றில் பி காம் முடித்தார், அதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் அவர் எல்எல்எம் (கடற்படை) தொடர்ந்தார். பிறகு ஜூலை 3, 1986 இல் மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் எஸ் வெங்கிடேஸ்வரனின் சேம்பர்ஸில் கே.ஆர். ஸ்ரீராம் சேர்ந்தார்.
1997ம் ஆண்டு முதல் சொந்தமாக தாமே வழக்குகளை கையாள தொடங்கினார். குறிப்பாக கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தில் நிபுணத்துவத்துடன் வணிக விஷயங்களை கையாண்டார். துறைமுகச் சட்டங்கள், சுங்கச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், கடல் காப்பீடு (மறு காப்பீடு மற்றும் P&I உட்பட) ஆகியவற்றிலிருந்து எழும் ரிட் விஷயங்கள்; கம்பெனி சட்ட விவகாரங்கள் போன்றவற்றை கையாள்வதில் கைதேர்ந்தவராக திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 21, 2013 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நீதிபதி ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மார்ச் 2, 2016 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக உறுதி செய்யப்பட்டார். இந்நிலையில் தான், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அந்தஸ்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதுவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.