100 நாள் வேலையில் ஆர்வம்: ஆட்கள் இல்லாததால் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள்!
கோவில்பட்டி விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளித்துவரும் நிலையில், ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்காலத்தில் ட்ரோன்கள் தான் கைகொடுக்கும் என்றும்...
கோவில்பட்டி விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளித்துவரும் நிலையில், ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்காலத்தில் ட்ரோன்கள் தான் கைகொடுக்கும் என்றும் அதனால் அவற்றிற்கு அரசு மானியம் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
புரட்டாசி பட்டம்:
ஆடிப்பட்டம் தேடி விதைப்பது போல் புரட்டாசி பட்டமும் விதைக்கப்படு. புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, குதிரைவாலி, சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடுவது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்த ஆண்டும் விவசாயிகள் புரட்டாசி பட்டத்தை பூஜையுடன் வரவேற்று பயிரிட்டனர். ஆனால், ஆரம்பத்தில் மழை பெயருக்கும் தலை காட்டவில்லை. இதனால் பயிர்கள் முளைக்காமல் கருகிக் போயின. விவசாயிகளும் வேதனையில் ஆழ்ந்தனர். இருப்பினும் மீண்டும் பயிர்களை நடவு செய்தனர்.
இந்நிலையில்தான், வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆனால் மழையோ கனமழை, மிககனமழை என வெளுத்து வாங்குவதால் பயிர்களை விட உயரமாக களைகள் வளரத் தொடங்கிவிட்டனன.
விளைநிலங்களில் ஈரப்பதம் அதிகமாகவே, நிலங்களில் இறங்கி பணி செய்ய முடியாத அளவுக்கு நிலை உள்ளது. இதனால் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கை தெளிப்பான், இயந்திரத் தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்கின்றனர்.
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு:
100 நாள் வேலைத் திட்டத்திற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், வேறுவழியின்றி ட்ரோன் மூலம் மருந்து தெளித்து வருகின்றனர். ஏற்கெனவே கடந்த இரண்டாண்டுகாளகவே கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது பிரபலாமகவே இருக்கிறது.
மேலை நாட்டு தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஆளில்லா சிறிய வடிவிலான பறக்கும் விமானம் (ட்ரோன்) மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மருந்து தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ட்ரோன் வாங்க மானியம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோவில்பட்டி விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருள்கள், வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்கி வருகிறது.
அதேபோல், வேளாண் பொறியியல் துறை மூலம், நெல் நாற்று நடவு இயந்திரம், பவர் ட்ரில்லர், சுழற் கலப்பை, குழிதோண்டும் கருவு, பயிர் கதிரடிக்கும் இயந்திரம், தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான், தென்னை மரம் ஏறும் கருவி, ட்ராக்டர் ஆகிய கருவிகளும் மானியத்தில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ட்ரோன் இயந்திரங்களுக்கும் விவசாயிகள் மானியம் கோரியுள்ளனர்.