கோடநாடு வழக்கை தீவிரப்படுத்தும் போலீஸ்.. விசாரணைக்கு அழைக்கப்பட்ட சயன்!
கோடநாடு ஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலர்களில் ஒருவரைக் கொன்று, பின்னர் சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச்சென்றது.
![கோடநாடு வழக்கை தீவிரப்படுத்தும் போலீஸ்.. விசாரணைக்கு அழைக்கப்பட்ட சயன்! Kodanad Estate heist-cum-murder case accused K V Sayan summoned for police inquiry at Nilgiris கோடநாடு வழக்கை தீவிரப்படுத்தும் போலீஸ்.. விசாரணைக்கு அழைக்கப்பட்ட சயன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/16/e21071f22b181c2e5b5a03f7c06b5f9c_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றம் சுமத்திய சயன், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணை நீலகிரியில் நடைபெறவுள்ளது.
நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட் முன்னாள் அதிமுக தலைவர் ஜெயலலிதாவிற்கு சொந்தமானது. அவருக்கும் அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரிய சசிகலாவுக்கும் சொந்தமானது. இந்த எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலர்களில் ஒருவரைக் கொன்று, பின்னர் சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச்சென்றது.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் மற்றும் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆனால் காவல்துறை திடீரென மேலும் விசாரணைக்கு செல்ல முடிவு செய்துள்ளது.
‘புதிய சான்றுகளின் அடிப்படையில்’ ஜெயலலிதா இறந்த சில மாதங்களுக்கு பிறகு கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், சிஆர்பிசி பிரிவு 173 இன் கீழ் ஒரு வழக்கை மேலும் விசாரிக்க விதிகள் உள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த சயனுக்கு கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அந்த குற்றத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார். அதன் பின்னர், 2019 ஆம் ஆண்டில் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)