கிருஷ்ணகிரி நகருக்கு அருகே சிறுத்தை புலி நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்...!
’’கூசுமலைகுன்று அருகே கூண்டு வைத்துள்ளனர் அதில் ஒரு நாய் குட்டியை கட்டிவைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்’’
கிருஷ்ணகிரி மாவட்டம் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதிகளாக அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை புலிகள், மான் போன்ற விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு, தேடி அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைவது தொடர் சம்பவமாகவே உள்ளது. அப்படி கிராமங்களை விலங்குகளை வனத்துறையினர் விரட்டுவதும் பிடித்துச் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் விடும் பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேஆர்பி அணை அருகே உள்ள சிறிய மலைக் குன்றில் சிறுத்தைப்புலி ஒன்று குட்டியுடன் சுற்றிவருவதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர், வனத்துறையினர் சிறுத்தை புலியை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த சிறுத்தை புலி தற்போது இடம்பெயர்ந்து. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கூசு மலை என்னும் சிறுமலை குன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வெளியே வரும் சிறுத்தைப்புலி அருகே உள்ள பாஞ்சாலி ஊர் கிராமத்தில் நுழைந்து, ஆடு மற்றும் நாய்களை கடித்து இழுத்துச் செல்வதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். சிறுத்தை புலி நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை புலி பதுங்கி இருப்பதாக கூறப்படும் கூசுமலைகுன்று அருகே கூண்டு வைத்துள்ளனர் அதில் ஒரு நாய் குட்டியை கட்டிவைத்து சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் இதுவரையில் சிறுத்தை புலி கூண்டில் சிக்கவில்லை இதன் இடையே பொதுமக்கள் பீதி அடுத்து செய்தி சேகரிக்க சென்றபோது அங்கு கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு நாய் குட்டியும் இருக்கிறது, ஆனால் கூண்டு கதவு திறக்கபடாமல் மூடப்பட்டு உள்ளது.
சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்லாததால் கூண்டு திறந்து உள்ளதா மூடப்பட்டு உள்ளதா என யாருக்கும் தெரியவில்லை வனத்துறை அலுவலர்கள் முறையாக கண்காணிக்கவில்லை என தெரிகிறது. இருப்பினும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். கிருஷ்ணகிரி நகரத்திற்கு மிக அருகாமையில் சிறுத்தை புலி நடமாட்டம் காணப்பட்டதால் நகர மக்களும் சுற்றியுள்ள கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்திரஜாவ ஏன் ELIMINATE பண்ணீங்க? கொந்தளித்த விஜயலட்சுமி | Survivor Zee Tamil Day 7 Review |Kadargal