மேலும் அறிய

சிறப்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகம்; நல்லாட்சிக்கு இதுவே உதாரணம் - முன்னாள் தலைமை செயலாளர் புகழாரம்

அதுவே குட் கவர்னஸ் (நல்ல ஆட்சி) என்பதற்கு உதாரணம் என முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (ஓய்வு) தற்போதைய தமிழக அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவருமான திரு.கே. ஞானதேசிகன் புகழாரம்.

மாவட்ட நிர்வாகம்  சிறப்பான முறையில் தனக்கே உரிய சிறப்பான முத்திரை பதித்து சிறப்பான நிர்வாகமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதுவே குட் கவர்னஸ் (நல்ல ஆட்சி) என்பதற்கு உதாரணம் என முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (ஓய்வு) தற்போதைய தமிழக அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவருமான திரு.கே. ஞானதேசிகன் புகழாரம்.

கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி கலையரங்கில் முதல்வரின் முகவரித்துறை சார்பாக நல்லாட்சி வாரம் முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பயிலரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (ஓய்வு) தற்போதைய தமிழக அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவருமான திரு.கே. ஞானதேசிகன்,சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்தலைமை வகித்தார்கள்


சிறப்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகம்; நல்லாட்சிக்கு இதுவே உதாரணம் - முன்னாள் தலைமை செயலாளர் புகழாரம்

முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (ஓய்வு) தற்போதைய தமிழக அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என்னை தொடர்பு கொண்டார்கள் நான் இரண்டு காரணங்களுக்காக ஒத்துக் கொண்டேன். 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த காரணத்திற்காகவும், இந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்காகவும் ஒத்துக் கொண்டேன். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணிபுரிந்த போது சின்ன விஷயங்களில் கூட ஆர்வம் கொண்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.  மக்களின் பிரச்சினைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு  பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.  கரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள்  மூலம் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளே சாட்சியாகும்.  மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டுமல்ல அவருடைய வழிகாட்டுதலின்படி  அனைத்து அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறீர்கள்.  ஒரு குழுவாக பணிபுரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மாவட்டத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து திட்டங்களும் அதற்கு தனியாக ஒரு தமிழ் பெயர்,  தனியாக ஒரு முத்திரை, தனியாக ஒரு சிறப்பு என முழுமையாக சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இதுதான் ஒரு சிறந்த மாவட்ட நிர்வாகம் ஆகும். 

அதுதான் சிறந்த கவர்னஸ்(சிறந்த ஆட்சி) ஆகும்.  நான் 40 ஆண்டு காலம் தமிழகத்தில் அரசு பணியாளராக பணிபுரிந்து இருக்கிறேன். எனக்கு தெரியும் இந்த அரசு பணியில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது.  எத்தனை வகையான நிலைப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும், எவ்வாறு சவால்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.  இங்கு உள்ள அரசு அலுவலர்கள் ஆகிய நீங்கள் நமது மக்களுக்காக நமது மாநில மக்களுக்காக கடமை உணர்வுடன் பணி செய்வதற்காக நியமிக்கப்பட்டு உள்ளீர்கள்.  அரசு அலுவலர்கள் ஆகிய உங்களுக்கு மீண்டும் இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயமாகும். இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி குட் கவர்னஸ் (நல்லாட்சி) என்ற சிறந்த நிர்வாகத்தில் நீங்கள் பணி புரிய வேண்டும்.  உங்களுக்கு ஏற்படுகின்ற சவால்  போன்றவற்றை எதிர்கொண்டு வேலை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் ஒவ்வொரு திட்டத்திலும் முத்திரையை பதித்து உள்ளார்கள் அதிலும் தனிப்பட்ட முறையில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களில் கரூர் முத்திரையை பதித்து உள்ளார்கள்.  அரசினுடைய அனைத்து திட்டங்களுக்கும் கரூர்  முத்திரையை உதாரணம் காட்டலாம் என்ற அளவிற்கு இருக்கிறது. 

நான் பணி புரியும் எனது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை பற்றி சொல்ல விரும்புகிறேன்.  அனைவரும் ஒரு வீட்டு மனை வாங்க வேண்டும் அந்த மனையில் வீடு கட்டி சிறப்பாக வாழ வேண்டும் என்பது நமக்கு ஆசை,  ஆனால் அதை வாங்குவதற்கு முன்பு அது நல்ல மனையா, அரசு விற்பனைக்கு அனுமதி கொடுத்த மனையா, வில்லங்கம் இல்லாத மனையா என்பதை எண்ணி வாங்க வேண்டும்.  பெரு நகரங்களில் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அப்பார்ட்மெண்ட்  குடியிருப்புகளில் பெரும் தொகை கொடுத்து வாங்கி ஏமாந்து போகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வாக 2016 வீட்டுமனை சட்டம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது  அதை தெரிந்து கொண்டு அதன்படி வீட்டு மனைகளை வாங்க வேண்டும்.  500 சதுர மீட்டருக்கு மேல் இருக்கிற எந்த ஒரு வீட்டு மனையையும் கண்டிப்பாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில்  பத்திரப்பதிவு செய்ய வேண்டும். ஒரு வீட்டுமனைக்கு அனுமதி வாங்கும்போது உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று இருக்கிறாரா, அந்த மனைக்கு அவர்தான் சொந்தக்காரரா, ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை பார்த்து தான் நாங்கள் அனுமதி அளிக்கிறோம். எங்கள் துறையின் வெப்சைட்டை பார்த்து அதில் உள்ள அனைத்து வீட்டுமனை திட்டங்களையும், விவரங்களையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  இப்பொழுது வீட்டுமனை தொடர்பாக வரும் விளம்பரங்களில் கட்டாயமாக எங்கள் துறையின் அனுமதி பெற்று உள்ளதை ஒளிபரப்ப வேண்டும் என்பதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 


சிறப்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகம்; நல்லாட்சிக்கு இதுவே உதாரணம் - முன்னாள் தலைமை செயலாளர் புகழாரம்

மேலும், ஒரு பெரிய பிளாட் வாங்கும் போது அதில் பிரச்சினை ஏற்படும் போது எங்களிடம் நீங்கள் புகார்களை அளித்தால் அதை நாங்கள் ஒரு நீதிமன்ற அளவிற்கு விசாரணை செய்து முடிவுகளை வழங்குகிறோம். ஒரு புரமோட்டர் வீடு கட்டும் போது வீடு வாங்குவோரிடமிருந்து  பெறப்படும் தொகையில் 70% பணத்தை வீடு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதும் நமது சட்டத்தில் உள்ளது. நீங்கள் எந்த சூழ்நிலையிலும் ஏமாந்து விடக்கூடாது ஒருவேளை தெரியாமல் தவறாக வாங்கி விட்டால் அதற்கு தீர்வாக ஒரு ஆணையம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அனுமதி இல்லாமல் எந்த ஒரு வீட்டுமனையும் வாங்கவும் கூடாது விற்கவும் கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

 

மேலும், கரூர் மாவட்ட நிர்வாகம்  சிறப்பான முறையில் தனக்கே உரிய சிறப்பான முத்திரை பதித்து சிறப்பான நிர்வாகமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதுவே குட் கவர்னஸ் (நல்ல ஆட்சி) என்பதற்கு உதாரணம் என்பதை தெரிவித்து நிறைவு செய்கிறேன் என முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (ஓய்வு) தற்போதைய தமிழக அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவருமான திரு.கே. ஞானதேசிகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். முன்னதாக பல்வேறுத்துறை சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு செயல்திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (ஓய்வு) தற்போதைய தமிழக அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவலை வைத்து ஒரு முன்னாள் தலைமைச் செயலாளர்கள் நமது அழைப்பை ஏற்று இங்கு சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எந்த ஒரு முடிவு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டாலும் அனைவரும் ஒத்துக்கொள்ள கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். உதாரணமாக கடவூர் பகுதியில் பொம்மநாயக்கன் பட்டி கிராமத்தில்  பள்ளிக்கூடத்தில் வகுப்பறை கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டது. இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக 10 ஆண்டுகளாக வகுப்பறைகள் கட்டாமல் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இரண்டு தரப்பினரிடம் பேசி வகுப்பறைகள் கட்டி தற்போது குழந்தைகள் பள்ளிக்கு நல்ல வகையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். 10 ஆண்டுகள் காரணமே இல்லாமல் தாமதப்பட்டு கொண்டிருந்த வகுப்பறைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. நல்ல நிர்வாகத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

 நல்ல நிர்வாகம் என்பது அனைத்து தரப்பினரும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும் அதில் நம்முடைய மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனில் நல்ல முடிவுகளை முன்னிறுத்தி இருக்கிறோம். சமீபத்தில் நம் மாவட்டத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இரண்டு இலட்சினை அறிமுகப்படுத்தப்பட்டது.  நூலன் நூலி அதில் நூலி மாற்றுத்திறனாளியாக இருப்பார் அனைவருக்கும் சமம் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்த இலட்சினை உருவாக்கப்பட்டது.  அதேபோல் விடியல் வீடு கண்பார்வையற்ற நபர்களுக்கு அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் செயல்படும் அளவிற்கு புதிதாக வடிவமைக்கப்பட்டு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் ஒரு அலுவலக  வேலை என்றால் ஒரு கோப்பு உருவாக்க வேண்டும் அந்த கோப்புகள் ஒவ்வொரு இடமாக சென்று வருவதை கவனித்து நிறைவாக அந்த பயனை பயனாளிக்கு அளிக்க கவனிக்க வேண்டும். அதன்படி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் யாராவது ஒருவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கும் பொழுது அவர்கள் ஆதரவற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தால் மனு வழங்கிய ஒரு மணி நேரத்தில் உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தற்பொழுது  12க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரை காத்திருந்து கோப்புகளை நகர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய முடிவுகளை கூட ஒரு மணி நேரத்தில் எடுத்து உள்ளோம். இதுவே சிறந்த மாவட்ட  நிர்வாகத்திற்கு உதாரணமாகும். அரசாங்க பணம் என்பது மக்களின் பணம், மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம் அதை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும். 12 வாரங்கள் கொரோனா காலங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்த முடியவில்லை இருந்த போதும் ஆன்லைன் மூலமாக நாம் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைத்தோம் இது ஆன்லைன் மூலம் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் சிறந்த நிர்வாகமாக நான் கருதுகிறேன். 


சிறப்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகம்; நல்லாட்சிக்கு இதுவே உதாரணம் - முன்னாள் தலைமை செயலாளர் புகழாரம்

 

நமது மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. அதன் மூலம் தகவல் பலகை வைத்து, நாம் திட்டங்கள் என்ன, நாம் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் ஒப்புதலோடு செய்கிறோம். நம்மளுடைய தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை உடனடியாக செய்வது தான் ஒரு மாவட்ட நிர்வாகத்தின் வேலை அதன்படி கரூர் மாவட்டத்தின் அருகே உள்ள கருப்பபாளையம் என்ற கிராமத்தில் 30 ஆண்டுகளாக பேருந்துகள் இல்லாத கிராமத்திற்கு பேருந்து கேட்டு மீண்டும் மீண்டும் மனு செய்தும் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள்.அதை கவனத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த கிராமத்திற்கு பேருந்து விடப்பட்டது இதுவே சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக நான் நினைக்கிறேன். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் திரு.எம் லியாகத், திருமதி.கவிதா(நிலம் எடுப்பு), அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சீனிவாசன், இணை இயக்குநர் (சுகாதரா பணிகள்) மரு.சுதர்சனயேசுதாஸ்,  துணை இயக்குநர் மரு.சந்தோஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, கூட்டுறவுத்துறை இணை மண்டல மேலாளர் திரு.கந்தராஜா, தனித்துணை ஆட்சியர்(சபாதி) திரு.சைபுதீன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget