கரூரில் டிராக்டர் வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்து - உயிர் தப்பிய 4 பேர்
செங்கல் ஏற்றிச் சென்ற டிராக்டர் வாய்க்கால் பாலத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறுமிகள் உட்பட நான்கு பேர் உயிர் தப்பினர்.
செங்கல் ஏற்றிச் சென்ற டிராக்டர் வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்து.
குளித்தலையில் செங்கல் ஏற்றிச் சென்ற டிராக்டர் வாய்க்கால் பாலத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் தப்பினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம், பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டின் வேலைக்காக செங்கல் ஏற்றிக்கொண்டு டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டர் நேற்று சென்று கொண்டிருந்தது. திருச்சி கரூர் மாநில நெடுஞ்சாலையில் ராஜேந்திர பகுதிக்குச் செல்லும்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் அப்பகுதி வழியாக செல்லும் வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் வாய்க்கால் கட்டையின் மேல் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த டிராக்டரை ஓட்டி வந்தவர் வாய்க்கால் தண்ணீரில் குதித்து நீந்தி கரை சேர்ந்துள்ளார். இந்த விபத்தில் காயம் அடைந்த வரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த டிராக்டருடன் இணைக்கப்பட்ட செங்கல் இருந்த டிப்பரில் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு பெண்மணி இருந்துள்ளனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் உயிர்த்தப்பினர். விபத்துக்குள்ளான இந்த டிராக்டர் பொக்லைன் இந்திரன் மூலம் மீட்கப்பட்டது இந்த டிராக்டரை ஓட்டிச் சென்றவர் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் யார் என்பது தெரியவில்லை இது தொடர்பாக குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது விற்ற 11 பேர் கைது 83 பாட்டில்கள் பறிமுதல்.
சட்டவிரோதமாக மது விற்ற 11 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 83 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10:00 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விளக்க மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசாரும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசாரும், தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபானங்களை பதிக்க வைத்து சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கரூர் மது விளக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பெயரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் மது விற்ற புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சேர்ந்த ஆனந்த், குழுத்தலையைச் சேர்ந்த பிச்சை அம்மாள், பில்லா பாளையத்தைச் சேர்ந்த சரவணன், மன்மங்களை சேர்ந்த ரவி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சின்ன தாராபுரத்தைச் சேர்ந்த தண்டபாணி, கருப்பாத்தாள் நஞ்சக்காளி குறிச்சியை சேர்ந்த பழனியம்மாள், குளித்தலையைச் சேர்ந்த துளசி, பல்லாபாளையத்தைச் சேர்ந்த வசந்தா, நெய்தல் உரை சேர்ந்த முருகன், உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 83 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.