''கைத்தாங்க ஜீவன் உண்டு " - கரூரில் தீ விபத்துகள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து போலி ஒத்திகை
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில் விழிப்புணர்வு.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில் வருகின்ற வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், பிரபுசங்கர் தலைமையில் வருகின்ற வடகிழக்கு பருவமழை 2023 முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போலி ஒத்திகையினை அலுவலர்கள் பார்வையிட்டார்கள். வருகின்ற வடகிழக்கு பருவமழையின் போது அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்காலங்களில் போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளின் போது பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழையப்பொருட்கள் கொண்டு எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும்.
மேலும் தீயினால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் மற்றும் பல்வேறு வகையாக தீ விபத்துகளை எவ்வாறு கட்டுபடுத்துவது குறித்தும், மழைக்காலங்களில் போது சாலை ஓரங்களில் மரங்கள் மற்றும் கட்டுமான இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் போலி ஒத்திகையினை அலுவலர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை அலுவலர்கள். செய்து காண்பித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாக போலி ஒத்திகையினை செய்து காண்பித்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை அலுவலர்களை பாராட்டினார்கள். முன்னதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் மீட்புப் பணி உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட அலுவலர் (தீயனைப்பு மற்றும் மீட்புப் பணி துறை), வடிவேல், உதவி அலுவலர் சந்திரகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டயுதாபாணி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அன்புமணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர், ராதிகா, மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.