கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 7,248 கன அடி தண்ணீர் வந்தது. தென்கரை பாசன வாய்க்காலில், 400 கன தண்ணீரும் திறக்கப்பட்டது.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 7,248 கன அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 7,315 கனஅடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில் 6,915 கன அடி தண்ணீரும், தென்கரை பாசன வாய்க்காலில், 400 கன தண்ணீரும் திறக்கப்பட்டது.
அமராவதி அணை:
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு விநாடிக்கு, 125 கனஅடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு, 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 54.83 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை:
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.79 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.
கரூர் மாவட்டம், மாநகர பகுதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளான லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், மாயனூர், புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, நங்கவரம், அய்யர்மலை, தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்தது.
பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் இரவில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் மழைநீர் சாலைகளில் வெள்ள நீராக ஓடியது. குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்த நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சற்றே சிரமம் அடைந்தனர்.