கரூரில் பூச்சி தாக்குதலால் முருங்கைக்காய் வரத்து குறைவு - கிலோ ரூ.100க்கு விற்பனை
கரூர் மாவட்டத்தில், தொடர் கனமழையின் காரணமாக, காய்கள் அழுகி விற்பனைக்கு கொண்டு போக முடியாமல் வீணாகியுள்ளது. இதனால், முருங்கைக்காய் விற்பனைக்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது.
பூச்சி தாக்குதலால் முருங்கைக்காய் வரத்து குறைவு
அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில், தொடர் கனமழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக, முருங்கைக்காய் வரத்து குறைந்து, கிலோ 100-க்கு விற்பனையாகிறது. முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து போய் உள்ளன. இதனால் சீசனுக்கு முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள், முருங்கைக்காய் அறுவடை செய்ய இயலாமல், நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால், முருங்கைக்காய் வரத்து குறைந்து கீலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. முருங்கை காய்த்து இருந்த தோட்டத்து மரங்களிலும், தொடர் கனமழையின் காரணமாக, காய்கள் அழுகி விற்பனைக்கு கொண்டு போக முடியாமல் வீணாகியுள்ளது. இதனால், முருங்கைக்காய் விற்பனைக்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது.
அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தபாடி, கோவிலூர், நாகம்பள்ளி, நெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல், முருங்கைக்காய் பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கைக்காய் திராட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால், தமிழக மாவட்டத்தில் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும், அரவக்குறிச்சி பகுதியின் முருங்கைக்காய்க்கு தனி மவுசு உள்ளது. ஆகையால், மலைக்கோவிலூர், ஈசநத்தம், இந்திரா நகர், பள்ளப்பட்டி, பழனி சாலை உள்ளிட்ட பகுதிகளில், மொத்த கொள்முதல் மையங்களில் இருந்து முருங்கைக்காயை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
கரூர் மாவட்டத்தில் மழையினால் முருங்கைக்காய்கள் சேதம் விவசாயிகள் சோகம்.
இந்நிலையில், அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக, முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து போய் உள்ளன. பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. முருங்கைக்காய் காய்த்துள்ள பெரும்பாலான மரங்களில், தொடர் மழையினால் காய்கள் சேதம் அடைந்து, பறிக்க இயலாத நிலை உள்ளது. இதனால், அடுத்த சீசனுக்கு முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் முருங்கைக்காய் அறுவடை செய்ய இயலாமல், நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக, முருங்கை விவசாயிகளுக்கு பணப் பயனில்லாத சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு முருங்கை காய்த்து இருந்த தோட்டத்திலும், மரங்களிலும் தொடர் கனமழையின் காரணமாக காய்கள் அழுகி, விற்பனைக்கு கொண்டு போக முடியாமல் வீணாகியுள்ளது. இதனால், அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விற்பனைக்கு வரத்து மிக குறைவாகவே உள்ளது. இதனால், முருங்கைக்காய் வரத்து குறைந்து கிலோ 100 ரூபாய் விற்பனையாகின்றன.
கரூர் மாவட்டத்தில் முருங்கைக்காய் விலை உயர்வின் காரணமாக முருங்கைக்காய் ஒன்று பத்து ரூபாய்க்கும், அதற்கு மேலாகவும் விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு முருங்கைக்காய் பத்து ரூபாயா!! என்று கேட்கும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் விலை உயர்வின் காரணமாக, மிகவும் குறைவான முருங்கைக்காய் வரத்து உள்ளது. விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர். நன்றாக விற்கும் இந்த சீசனில் மழை காரணமாக முருங்கை பூக்கள் எல்லாமே மரத்திலேயே உதிர்ந்து விட்ட காரணத்தால், மேலும் காய்கள் அழுகி விற்பனைக்கு கொண்டு போக முடியாமல் வீணாகியுள்ளது. இதனால், குறைவான முருங்கைக்காயே விற்பனை செய்ய முடிகிறது. அதுவும் விலை உயர்வால் முருங்கைக்காய் வாங்க இல்லத்தரசிகள் யோசிக்கின்றனர்.